Tamil cricket
SA vs WI, 1st T20I: பாவெல் அதிரடியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்தன் காரணமாக போட்டி தொடங்குவது தாமதமானது. அதன்பின் இப்போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 21 ரன்களிலும், ரைலி ரூஸோவ் 10 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 14 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் ஒரு ரன்னிலும், என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Tamil cricket
-
ஐபிஎல் 2023: பேர்ஸ்டோவுக்கு மாற்றாக பிபிஎல் தொடர் நாயகனை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 16ஆவது சீசனிலிருந்து விலகிய ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ZIM vs NED, 3rd ODI: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது ஜிம்பாப்வே!
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. ...
-
SA vs WI, 1st T20I: மில்லர் காட்டடி; விண்டிஸுக்கு 132 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பெயில்ஸின் பேட்டரியால் ரன் அவுட்டிலிருந்து தப்பித்த கருணரத்னே!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சமிகா கருணாரத்னே ரன் அவுட் ஆன போதிலும் ஜிங் பெயில்ஸ் பேட்டரி ஒர்க் ஆகாததால் அவருக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ...
-
ஏதுவான முறையில் தற்போது உடல் தகுதியை எட்டி இருக்கிறேன் - கிளென் மேக்ஸ்வெல்
இரண்டு ஆண்டுகள் பயோ பபுலுக்கு வெளியே தற்போது ஆர் சி பி ரசிகர்களுக்கு முன் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது என கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs NED, 3rd ODI: நெதர்லாந்தை சமாளித்து தொடரை வெல்லுமா ஜிம்பாப்வே?
ஜிம்பாப்வுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் இஸி வாங் - வைரல் காணொளி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இசி வாங் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
-
NZ vs SL, 1st ODI: ஷிப்லி வேகத்தில் வீழ்ந்தது இலங்கை!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
2 மணிக்கு தூங்கி 5 மணிக்கு மைதானத்திற்கு வருகிறேன் - சர்ஃபராஸ் ஓபன் டாக்!
தனது உடல் பருமன் குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கான் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். ...
-
பிரித்வி ஷாவின் உண்மை முகத்தை பார்ப்பீர்கள் - ரிக்கி பாண்டிங் வார்னிங்!
இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவின் உண்மையான முகம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வெளிவரும் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
NZ vs SL, 1st ODI: கருணரத்னே அசத்தல்; இலங்கைக்கு 275 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 275 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AFG vs PAK, 1st T20I: பாகிஸ்தானை திணறடித்தது ஆஃப்கான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 93 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: இஸி வாங் ஹாட்ரிக்கில் இறுதிப்போட்டிகுள் நழைந்தது மும்பை இந்தியன்ஸ்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47