Team india
SL vs IND: டி20, ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; வெளிப்படையான தேர்வுகுழுவின் பாரபட்சம்!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கான இந்திய அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
இதில் அறிவிக்கப்பட்டுள்ள டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் அங்கம் வகிக்கின்றனர். அதேசமயம் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
Related Cricket News on Team india
-
SL vs IND: இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா?
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்? - தகவல்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டான் யார்? போட்டியில் கேல் ராகுல் - ஷுப்மன் கில்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ZIM vs IND: இமாலய சிக்ஸருடன் புதிய மைல் கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்களை விளாசிய 7ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். ...
-
ஜிம்பாப்வே அணிக்காக வரலாற்று சாதனை படைத்த சிக்கந்தர் ரஸா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களைக் கடந்த முதல் ஜிம்பாப்வே வீரர் எனும் சாதனையை அந்த அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா படைத்துள்ளார். ...
-
SL vs IND: ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கும் பிசிசிஐ!
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் - கௌதம் கம்பீர்!
இந்தியா எனது அடையாளம் மற்றும் எனது நாட்டிற்கு சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்!
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ...
-
ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வோம் - ஜெய் ஷா!
ரோஹித் சர்மா தலைமையில் அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
பிரதமர் மோடிக்கு பிரத்யேக ஜெர்ஸியை பரிசளித்த பிசிசிஐ!
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய்ஷா அகியோர் இணைந்து இந்திய பிரதமர் மோடிக்கு ‘நமோ 1’ என்ற இந்திய அணியின் ஜெர்ஸியை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர். ...
-
அணிக்கு தேர்வான மகிழ்ச்சியில் செல்போன் & பாஸ்போர்ட்டை மறந்து விட்டேன்; ரியான் பராக் ஓபன் டாக்!
ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வான மகிழ்ச்சியில் தனது பாஸ்போர்ட் மற்றும் செல்போனை மறந்துவிட்டதாக ரியான் பராக் கூறிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் - ரியான் பராகிற்கு பதிலடி கொடுத்த ஸ்ரீசாந்த்!
தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என ரியான் பாராக் கூறிய நிலையில், முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பதில் கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND: முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ZIM vs IND: ஜிம்பாப்வே புறப்பட்டது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி இன்றைய தினம் ஜிம்பாப்வே புறப்பட்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24