Test cricket news
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இங்கிலாந்து; டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 1992 மேஜிக் மீண்டும் நிகழ்த்துவோம் என்று கூறி இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அடுத்ததாக அதே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து களமிறங்கியுள்ளதால் அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமானது. அந்த நிலைமையில் இன்று ராவில்பிண்டி நகரில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிரௌலி – பென் டக்கெட் ஆகியோர் டெஸ்ட் போட்டி என்பதை மறந்து பவர் பிளே போல ஆரம்பம் முதலே அதிரடியாக குவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடி நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகளை தோற்கடித்த அதே யுக்தியை இப்போட்டியிலும் கையாண்ட இங்கிலாந்து இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு ஒவ்வொரு ஓவரிலும் அதிரடியான பவுண்டரிகளை தெறிக்க விட்டது.
Related Cricket News on Test cricket news
-
லபுசாக்னேவின் பேட்டிங் பாராட்டுக்குறியது - உஸ்மான் கவாஜா!
மார்னஸ் லபுசாக்னே விளையாடிய விதம் பாராட்டுக்குறியது என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா பாராட்டியுள்ளார். ...
-
AUS vs WI, 1st Test: ஸ்மித், லபுசாக்னே இரட்டை சதம்; இமாலய ஸ்கோரை நோக்கி விண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 524 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
PAK vs ENG, 1st Test: பாக்கிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரட்டும் கிரௌலி, டங்கெட் இணை!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 174 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUS vs WI, 1st Test: லபுசாக்னே இரட்டை சதம்; ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 402 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
AUS vs WI, 1st Test: லபுசாக்னே அதிரடி சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 293 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
AUS vs WI, 1st Test: ஏமாற்றிய வார்னர்; தடுமாறிய ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்?
ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் குணமைடைய சிறுது காலம் ஆகும் என்பதால் அவர் வங்காள்தேச தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ...
-
BAN vs IND: இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ்?
விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
SL vs PAK, 2nd Test: டி சில்வா அபார சதம்; பாகிஸ்தானுக்கு 508 ரன்கள் டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 508 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: பாகிஸ்தான் பந்துவீச்சில் திணறும் இலங்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: பந்துவீச்சில் அசத்தும் இலங்கை; தடுமாறும் பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
SL vs AUS, 1st Test: அப்துல்லா ஷஃபிக் அபாரம்; இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் தோல்விக்கு இவர்கள் தான் காரணம் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான தோல்விக்கு இதுதான் காரணங்கள் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: ரூட், பேர்ஸ்டோவ் அபார சதம்; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47