The asia cup
ஸ்ரேயாஸுக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ!
நிறைவு பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து ஜிம்பாப்வே தொடரில் ஷிகர் தவான் தலைமையில் 2ஆவது நிலை இளம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்பின் வரும் ஆகஸ்ட் 27இல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா களமிறங்குகிறது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த ஆசிய கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்மின்றி விமர்சனத்தில் தவித்து வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு மாத ஓய்வுக்குப் பின் அணிக்குத் திரும்பியுள்ளார். அவர்களுடன் சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற சமீபத்திய தொடர்களில் அசத்திய சீனியர் வீரர்களும் அரஷ்தீப் சிங், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on The asia cup
-
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பில் அதிருப்தி காட்டிய ஆகாஷ் சோப்ரா!
ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தியடைந்துள்ளார். ...
-
முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்காதது மிகப்பெரும் தவறு - கிரன் மோர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரன் மோர் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: காரணமின்றி நீக்கப்பட்டுள்ள நட்சத்திர வீரர்கள்?
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
ஹர்ஷலைத் தொடர்ந்து ஆசிய கோப்பையிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இந்திய அணி அறிவிப்பு; ராகுல், அஸ்வினுக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஆசிய கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
காயத்தால் ஆசிய கோப்பையை தவறவிடும் ஹர்ஷல் படேல்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்சல் பட்டேல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்தியாவை பாகிஸ்தான் மீண்டும் வீழ்த்தும் - ரஷித் லதீஃப்!
கடந்த 2021 டி20 உலக கோப்பையில் தவறுகளைச் செய்த இந்தியாவை தோற்கடித்தது போல் இம்முறையும் பாகிஸ்தான் அணி வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லதீஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பையில் தீபக் சஹார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆசியக்கோப்பை தொடரில் இந்திய நட்சத்திர வீரர் தீபக் சஹாரை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: கேஎல் ராகுலுக்கு அணியில் இடமா?
ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வில் பிசிசிஐ பெரும் ரிஸ்க் எடுத்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ...
-
விராட் கோலியின் முடிவால் ரசிகர்கள் அதிருப்தி!
ராட் கோலி தனது பழைய ஃபார்முக்கு திரும்புவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் . ...
-
ஆசிய கோப்பை 2022: பாபர் ஆசாம் தலமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: போட்டி அட்டவணை வெளியீடு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டார். ...
-
ஆசிய கோப்பையில் விராட் கோலி விளையாடுவது சந்தேகம் தான் - டேனிஷ் கனேரியா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் விராட் கோலி இடம்பெறாத நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி புறக்கணிக்கப்படலாம் என்று டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47