The board
இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 09 முதல் 13ஆம் தேதிவரை நொய்டாவில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடரில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியானது செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியிலும், செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதிவரையிலும் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலேவில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on The board
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியானது தங்கள் அணியின் துணை பயிற்சியாளரகாக ராமகிருஷ்ணன் ஸ்ரீதரை நியமித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை யுஏஇ-க்கு மாற்றியது ஐசிசி!
வங்கதேசத்தில் நிலவிவரும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு நடைபெற இருந்த மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ENG vs SL, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளடு. ...
-
PAK vs BAN: டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் அமீர் ஜமால்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமீர் ஜமால் விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
WI vs SA: டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டிக்கு மாற்றம் - பிசிபி அறிவிப்பு!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டிக்கு மாற்றியமைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
PAK vs BAN: அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாமை அணியில் இருந்து விடுவித்தது பிசிபி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் மற்றும் டாப் ஆர்டர் பேட்டர் காம்ரன் குலாம் ஆகியோரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இருந்து மஹ்முதுல் ஹசன் ஜாய் விலகல்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியில் இருந்த மஹ்முதுல் ஹசன் ஜாய் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரருக்கு தடை!
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை அணி வீரர் நிரோஷன் டிக்வெல்லா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தடை செய்யப்பட்டுள்ளார். ...
-
நியூசிலாந்து ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய டெவான் கான்வே, ஃபின் ஆலன்!
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ஃபின் ஆலன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். ...
-
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் பெல்லை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ...
-
ENG vs SL: பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த இலங்கை அணி வீரர்கள்!
இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணியானது தற்சமயம் அங்கு நடைபெற்றுவரும் நாடு தழுவிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். ...
-
உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தியுள்ளோம் - சனத் ஜெயசூர்யா!
இந்த இளைஞர்களை உயர் நிலைக்கு கொண்டு வந்து வெற்றிப் பயணத்தை தொடர நல்ல பயிற்சியாளரை இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன் என இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தில் இருந்து வேறுநாட்டுக்கு மாற்ற ஐசிசி திட்டம்!
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24