The coach
பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பத்தை வெளியிடும் பிசிசிஐ!
இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக மிகச் சிறப்பாக விளையாடியும் இந்தியா கோப்பையை வெல்லத் தவறியதால் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பதவி பற்றி தற்போது கேள்வி எழுந்துள்ளது. அதே போலவே தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் பதவி காலமும் உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்றது.
கடந்த 2016 முதல் அண்டர்-19 அணியின் பயிற்சியாளராகவும் என்சிஏவில் இயக்குனராகவும் செயல்பட்டு வந்த அவர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரி தனது பதவியிலிருந்து விலகியதும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த பொறுப்பில் சோதனை என்ற பெயரில் அடிக்கடி மாற்றங்கள் செய்ததை வழக்கமாக வைத்திருந்த நிலையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை ஆகிய 4 முக்கியமான தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
Related Cricket News on The coach
-
இந்திய அணியின் பயிர்சியாளராக தொடரும் ராகுல் டிராவிட் - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்திய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ராகுல் டிராவிட் தொடர்வார் என பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
எல்லா இடத்திலும் அரசியல் உள்ளது - ஜஸ்டின் லங்கர் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலியாவின் ஆடவர் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு கிரிக்கெட் வாரியத்துக்குள் இருந்த அரசியல்தான் காரணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் குற்றம்சாட்டியுள்ளார். ...
-
ஆஸி அணியின் துணைப் பயிற்சியாளராக விட்டோரி நியமனம்!
ஆஸ்திரேலியா அணியின் உதவி பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஜஸ்டின் லங்கர் பதவி விலகல்; மௌனம் கலைத்த பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜஸ்டின் லங்கர் விலகியதை அடுத்து முதல்முறையாக பாட் கம்மின்ஸ் மௌனம் கலைத்துள்ளார். ...
-
லங்கரின் ராஜினாமா குறித்து மைக்கேல் கிளார்க் கருத்து!
ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய விவகாரத்தில் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், இதுகுறித்து முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து கூறியுள்ளார். ...
-
லங்கர் ராஜினாமா; கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை விமர்சித்த பாண்டிங்!
ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் தனது பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ...
-
ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து லங்கர் ராஜினாமா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் பதவி விலகியதையடுத்து, புதிய தற்காலிக பயிற்சியாளராக மெக்டொனால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...
-
ஆஷஸ் தோல்வி எதிரொளி: கிறிஸ் சில்வர்வுட் அதிரடி நீக்கம்!
ஆஷஸ் தொடரில் 0-4 என மோசமாகத் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்டை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. ...
-
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் தேர்வு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47