The ipl
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலமானது எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.
அந்த வகையில் நேற்று 10 ஐபிஎல் அணிகளுமே தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது குஜராத் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில்லை அறிவித்துள்ளது.
Related Cricket News on The ipl
-
ஐபிஎல் 2024: அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் முழு விவரம்!
எதிர்வரும் ஐபிஎல் 2024 சீசனுக்கான மினி ஏலத்துக்கு முன்னதாக 10 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் குறித்த முழு விவரத்தைப் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் ரூ. 15 கோடி வரை கொடுத்து மும்பை அணி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ...
-
ஐபிஎல் 2024: 12 வீரர்களை கழட்டிவிட்ட கேகேஆர்!
2024 ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பாதி வீரர்களை அணியை விட்டு நீக்கி அதிர வைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முக்கிய வீரர்களை கழட்டிவிட்ட ஆர்சிபி; குழப்பத்தில் ரசிகர்கள்!
வரவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் ஆர்சிபி அணி 8 வீரர்களை விடுவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: எட்டு வீரர்களை வெளியேற்றிய சிஎஸ்கே; ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க திட்டம்!
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டுவைன் பிரிட்டோரியஸை விடுவித்தது சிஎஸ்கே?
வரும் ஐபிஎல் 2024 தொடருக்கான சிஎஸ்கே அணியிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிரிட்டோரியஸ் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
அடுத்த ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
துபாயில் நடத்தப்படும் ஐபிஎல் வீரர்கள் ஏலம்?
2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள மகளிர் மற்றும் ஆடவர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆர்சிபி அணியை விட்டு வெளியேறுவது ஏமாற்றமாக உள்ளது - மைக் ஹெசன்
கடந்த 4 சீசன்களில் 3 முறைன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். ஆனால் வீரர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்தை போல் கோப்பையை மட்டும் வெல்ல முடியவில்லை என ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். ...
-
இடது கையிலும் பந்துவீச பயிற்சிசெய்துவரும் ரியான் பராக்!
வலதுகை சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டரான ரியான் பராக் தற்போது இடது கையிலும் பந்துவீச பயிற்சி மேற்கொண்டு வருதாக தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ...
-
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்த நடத்தும் 9ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - அம்பத்தி ராயுடு!
அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சய் பங்கார், மைக் ஹெசன்!
ஆர்சிபி அணியின் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் மற்றும் இயக்குனரான மைக் ஹெசன் ஆகிய இருவரும் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் நியமனம்!
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24