The sri lanka cricket
BAN vs SL: முதலிரண்டு டி20 போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்!
இலங்கை அணி இம்மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது மார்ச் 04ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஆஃப்கானிஸ்தான் தொடரின் போது நடுவரை விமர்சித்தாக இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு ஐசிசி 3 கரும்புள்ளிகளை வழங்கியுள்ளது. மேலும் அவர் கடந்த 24 மாதங்களுக்குள் 5 கரும்புள்ளிகளைப் பெற்றுள்ளதால், ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. அந்த வகையில் நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கெதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் விளையாட வநிந்து ஹசரங்காவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on The sri lanka cricket
-
SL vs AFG: விதிகளை மீறியதாக ஹராங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை!
களநடுவரை கடுமையாக விமர்சித்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதமும், மூன்று கரும்புள்ளிகளையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது. ...
-
SL vs AFG, 2nd T20I: ஆஃப்கானை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது இலங்கை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
SL vs AFG: டி20 தொடருக்கான இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகள் அறிவிப்பு!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளைடாடும் இரு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ...
-
SL vs AFG: இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு; தசுன் ஷனகா நீக்கம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
SL vs AFG: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு; அணியை வழிநடத்தும் தனஞ்செயா டி சில்வா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தடையை நீக்கியது ஐசிசி!
அரசியல் தலையீடு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மேத்யூஸ்!
இலங்கை டி20 அணிக்கு வநிந்து ஹசரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 3 வருடங்கள் கழித்து டி20 அணிக்கு திரும்பியுள்ளார். ...
-
இலங்கை அணியிலிருந்து பதும் நிஷங்கா விலகல்; ஷெவோன் டேனியலுக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பதும் நிஷங்கா உடல்நலக் குறைவு காரணமாக விலகியுள்ளார். ...
-
இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமனம்!
இலங்கை ஒருநாள் அணிக்கு குசல் மெண்டிஸ் கேப்டனாகவும், டி20 அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹசரங்கா!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியில் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
இலங்கை அணியின் ஆலோசகராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அடுத்த ஓராண்டுக்கு முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ...
-
அடுத்தாண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா!
இந்திய கிரிக்கெட் அணி 2024ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
விளையாட்டுத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர்!
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரனசிங்கேவை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். ...
-
யு19 உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை இழந்தது இலங்கை!
2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற இருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24