This indian
ரசிகரிடம் வழி கேட்ட எம் எஸ் தோனி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக ஐசிசியின் 3 விதமான கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சரித்திர சாதனை படைத்துள்ளார். அதே போல இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற இலக்கணம் உருவாகும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு, மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர், நிறைய போட்டிகளில் அழுத்தமான மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று வரலாற்றின் மிகச்சிறந்த ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார்.
அதே போல தற்போதைய அணியில் இருக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்களுக்கு அப்போதே சீனியர்களை கழற்றி விட்டு வாய்ப்பு கொடுத்து வளர்த்த அவர் இந்தியாவின் வருங்காலத்தை வளமாக கட்டமைத்த பெருமைக்குரியவர். அப்படி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவானாக போற்றப்படும் அவர் 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதில் கடந்த வருடம் 9ஆவது இடத்தை பிடித்த சென்னை இம்முறை அவரது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு 5ஆவது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி மும்பையின் ஆல் டைம் சாதனையும் சமன் செய்தது.
Related Cricket News on This indian
-
இந்திய அணிக்கு இரண்டு புதிய பந்துவீச்சாளர்கள் கிடைத்துள்ளனர் - பராஸ் மாம்ப்ரே!
இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா கூடிய விரைவில் பந்துவீசுவர்கள் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். ...
-
டெல்லி அணியிலிருந்து வெளியேறும் நிதிஷ் ராணா!
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து நிதிஷ் ராணா நீக்கப்பட்டதையடுத்து, அவர் அந்த அணியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இன்ஸ்டாகிராம் வருமானம் உண்மையல்ல - விராட் கோலி
தனது இன்ஸ்டாகிராம் வருமானம் உண்மையல்ல என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன - ஆகாஷ் சோப்ரா!
ஷுப்மன் கில் ஐபிஎல் தொடரில் அசத்தியதை பார்த்து அடுத்த கிங்’காக உருவெடுத்துள்ளார் என்று நினைத்ததாகவும், ஆனால் அவரது செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
இன்ஸ்டாகிராமில் கோடிகளை அள்ளும் விராட் கோலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். ...
-
டி20 கிரிக்கெட்டில் கோலி ஏன் இடமில்லை? - ரோஹித் சர்மா பதில்!
விராட் கோலிக்கு ஏன் டி20 கிரிக்கெட்டில் இடம் இல்லை என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
திலக் வர்மா உலகக்கோப்பையில் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் திலக் வர்மாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் கிடைத்தால் நாம்மால் சாம்சனை பார்க்க இயலாது - ஆகாஷ் சோப்ரா!
இந்த நேரத்தில் கே எல் ராகுல் கிடைத்தால், உலகக் கோப்பை அணியில் மட்டும் கிடையாது ஆசிய கோப்பை அணியிலும் நம்மால் சஞ்சு சாம்சனை பார்க்க முடியாது. அவருக்கான வேலை முடிந்து விட்டது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
இந்த இந்திய பவுலரை சமாளிக்க 15 ஆண்டுகளாக நான் அதை முயற்சி செய்தேன் - ஆரோன் ஃபிஞ்ச்!
புவனேஷ்வர் குமாருக்கு எதிராக 15 ஆண்டுகளாக நான் அதை முயற்சி செய்தேன். என்னால் அது நடக்காமல் இருப்பதை தடுக்க முடியவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னால் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - ஷிகர் தவான்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
யுவராஜ் சிங்கிற்கு பிறகு நான்காம் இடத்தில் களமிறங்க நிலையான பேட்டர் இல்லை - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு பின் நிரந்தர நம்பர் 4 பேட்ஸ்மேன் இல்லாதது பின்னடைவாக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இதனை செய்தால் உம்ரான் தான் இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் - பிரையன் லாரா!
உம்ரான் மாலிக் டேல் ஸ்டெய்ன் உடன் தொடர்ந்து பணியாற்றி வந்தால், அவர் இந்தியா தயாரிக்கும் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் என்னுடைய பெயர் இல்லாத போது நான் அதிர்ச்சியடைந்தேன் - ஷிகர் தவான்!
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் என்னுடைய பெயர் இல்லாத பொழுது நான் முதலில் அதிர்ச்சி அடைந்தேன் என்று இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24