West indies cricket team
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் சுனில் நரைன்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் அறிவித்துள்ளார். 35 வயதான நரைன் ஓய்வு குறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான நரைன் 2012ஆம் அண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அதே ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமாகி அந்த அணி கோப்பை வெல்வதற்கு உதவியதுடன் அந்த தொடரின் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Related Cricket News on West indies cricket team
-
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் குற்றவாளி என தீர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த மர்லான் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த சர்ச்சையில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; அதிரடி வீரருக்கு இடம்!
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்த நடத்தும் 9ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WI vs IND: வெஸ்ட் இண்டிஸ் ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட நான் இரண்டு வெளிநாட்டு டி20 லீக்குகளை தியாகம் செய்ய வேண்டியதாக இருக்கும். நான் அதை செய்வதற்கு தயாராகவே இருக்கிறேன் என்று நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார். ...
-
உடற்தகுதி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கவனம் செலுத்த வேண்டும் - இயன் பிஷப்!
வெஸ்ட் இண்டீஸ் அணி குறித்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வேகபந்து வீச்சாளருமான இயன் பிஷப் வீரர்களின் உடல் தகுதி குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
WI vs IND, 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
சில வீரர்கள் தனித்துவமாக வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன் - பிரையன் லாரா!
இந்தியா உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய அணி. நாங்கள் முகாமை எங்கிருந்து தொடங்கினோம், தற்பொழுது எங்கு இருக்கிறோம் என்கின்ற வகையில் நாங்கள் சரியாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND 1st Test: 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
யாருமே 100 சதவீத உழைப்பை போடவில்லை - ஷாய் ஹோப் காட்டம்!
ஸ்காட்லாந்திற்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தன் அணி மீது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ...
-
நம்பர் 1 அணியாக வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் - கவுதம் கம்பீர்!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆறுதல் கூறியுள்ளார். ...
-
WI vs IND: 18 பேர் கொண்ட விண்டீஸ் அணி அறிவிப்பு; ஹோல்டர், அல்ஸாரி நீக்கம்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இதைவிட எங்கள் நிலைமை இன்னும் கீழே செல்ல முடியுமா? - விண்டீஸ் குறித்து கார்ல் கூப்பர்!
வெஸ்ட் இண்டீஸ் அணியால் இதைவிட எங்கள் நிலைமை இன்னும் கீழே செல்ல முடியுமா? என்றால் முடியும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்திற்கு மாற்றப்படும் டி20 உலகக்கோப்பை 2024?
2024 டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24