When england
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் அலெக்ஸ் ஹேல்ஸ்!
இங்கிலாந்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். கடந்த 2011ஆம் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் அதிரடியான டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக தன்னை அறிமுகப்படுத்தி குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தினார். குறிப்பாக 2014இல் ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் 2015 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் முதன்மை வீரராக விளையாடினார்.
அதை தொடர்ந்து 2016 டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக 116 ரன்கள் அடித்த அவர் டி20 கிரிக்கெட்டிலும் உலக கோப்பையிலும் சதமடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற இரட்டை சாதனைகளை படைத்து 2019 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியானவராக இருந்தார். இருப்பினும் 2017இல் ஒரு விடுதியில் இரவு நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதால் அந்த இருவருக்குமே இங்கிலாந்து வாரியம் அதிரடியாக தடை விதித்தது. அதில் பென் ஸ்டோக்ஸ் குறைந்த ரகளை மட்டுமே செய்தது நிரூபிக்கப்பட்டதால் அபராதத்துடன் தப்பிய நிலையில், அலெக்ஸ் ஹேல்ஸ் அபராதம் மட்டுமல்லாமல் 12 மாதங்கள் அதிரடியான தடையும் பெற்றார்.
Related Cricket News on When england
-
இந்தியாவுக்கு எதிராக தான் மிகப்பெரும் சவால் உள்ளது - நாசர் ஹூசைன்!
இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் பாஸ்பால் யுக்தி அடுத்து மிகப் பெரிய சவாலை சந்திக்க உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: உஸ்மான் கவாஜா அதிருப்தி!
நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தாமதமாக பந்துவீசியதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஐசிசி அபாராதம் விதித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
பாஸ்பாலை கடைபிடித்தால் நிச்சயம் அணியிலிருந்து தூக்கிவிடுவார்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இங்கிலாந்து கடைப்பிடிக்கும் அதிரடி பாஸ்பால் (Bazball) அட்டாக்கிங் பேட்டிங் முறையை இந்திய வீரர்கள் கடைப்பிடித்தால் அவ்வளவுதான், குறைந்தது 4 வீரர்களையாவது டீமை விட்டு தூக்கி வெளியே வீசி விடுவார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; பாகிஸ்தான், இந்தியா முன்னிலை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியளில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் முதலிரு இடங்களைப் பிடித்துள்ளன. ...
-
இந்தியாவிலும் எங்களது பாஸ்பால் தொடரும் - பென் ஸ்டோக்ஸ்!
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம் . அதனால் சிறப்பாக இந்தியாவிலும் விளையாடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
அபார கேட்ச் பிடித்து அசத்திய பேர்ஸ்டோவ் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
கடைசி பந்தில் சிக்சர் மற்றும் விக்கெட்டை வீழ்த்தி விடைபெற்றார் பிராட்!
நடப்பு ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தான் எதிர்கொண்ட கடைசி பந்தில் சிக்சரையும், தனது பந்துவீச்சின் கடைசி பந்தில் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
பிராடுடன் இணைந்து ஓய்வை அறிவித்தார் மொயீன் அலி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
ஆஸ்திரெலியாவுக்கு எதிரான 5ஆவது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
பந்தை மாற்றிய விவகாரம் குறித்து கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் சேதமடைந்த பந்திற்கு பதிலாக புதிய பந்தை அனுமதித்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
கையிலிருந்த கேட்சை கோட்டை விட்ட ஸ்டோக்ஸ் - வைரல் காணொளி!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்மித் அடித்த பந்தை கேட்ச் பிடித்த பென் ஸ்டோக்ஸ் அதனை பிடித்து கொண்டாட முயற்சித்த போது அவரது கைகளிலிருந்து பந்து நழுவிய காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது. ...
-
ஆஷஸ் 2023: வார்னர், கவாஜா அதிரடி; மழையால் தடைபட்ட ஆட்டம்!
தொடர் மழை காரணமாக இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. ...
-
ஸ்டூவர்ட் பிராடிற்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
பிராடிற்காக கண்ணீர் வடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் - வைரல் காணொளி!
ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு குறித்து சக வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கண்ணீர் மல்க பேட்டியளித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24