When rashid khan
டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ரஷித் கான்!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபயர் சுற்று ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அந்தவையில் இப்போட்டியில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை கைப்பறியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸுன் முன்னாள் ஜாம்பவான் டுவை பிராவோ 582 போட்டிகளில் விளையாடி 631 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், ரஷித் கான் 461 போட்டிகளில் 633 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
Related Cricket News on When rashid khan
-
எஸ்ஏ20 2025: ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: ஹென்றிக்ஸ், பிரீவிஸ் அதிரடியில் கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது எம்ஐ கேப்டவுன்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: கிளாசென், வில்லியம்சன் அரைசதம்; கேப்டவுன் அணிக்கு 150 ரன்கள் இலக்கு!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரில் வரலாற்று சாதனை படைக்கவுள்ள அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரின் மூலம் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக சில சிறப்பு சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: பயிற்சியைத் தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு தயாராகும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சூரத்தில் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ...
-
CT2025: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இப்ராஹிம் ஸத்ரான்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கடந்த மூன்று ஆண்டுகளில் நான் சிகப்பு பந்தை தொட்டது கூட இல்லை - ரஷித் கான்!
முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு திரும்பி வந்து நீண்ட வடிவத்தில் விளையாடுவது எனக்கு கடினமாக இருந்தது என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs AFG, 2nd Test: ரஷித் கான் சுழலில் வீழ்ந்த ஜிம்பாப்வே; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
வலியால் துடித்த ரிச்சர்ட் ந்ங்கரவா; ஒரு கணத்தில் மாறிய ரிஷித் கான் முகம் - வைரலாகும் காணொளி!
ஆஃப்கானிஸ்தனுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் ரிச்சர்ட் ந்ங்கரவா கயமடைந்து வலியால் துடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ZIM vs AFG, 2nd Test: ரஷித் கான் அபாரம்; தடுமாறும் ஜிம்பாப்வே - வெற்றி யாருக்கு?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்து தடுமாறி வருகிறது. ...
-
ZIM vs AFG, 2nd Test: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; ஆஃப்கான் தடுமாற்றம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 40 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
ZIM vs AFG, 2nd Test: ஆஃப்கானிஸ்தானை 157 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47