The world cup
ஃபிஃபா மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்திற்கு அதிர்ச்சியாளித்தது பிலிப்பைன்ஸ்!
பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று வெலிங்டன் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து - பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. இதில் அறிமுக அணியான பிலிப்பைன்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நியூஸிலாந்தை தோற்கடித்தது. இந்த போட்டியை காண 33 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.
நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 1995ஆம் ஆண்டு சாம்பியனான நார்வே அணியை வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்திருந்தது. இதேபோன்ற செயல்திறனை பிலிப்பைன்ஸ் அணிக்குஎதிரான ஆட்டத்திலும் நியூஸிலாந்து வீராங்கனைகள் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் பிலிப்பைன்ஸ் அணிக்கு ப்ஃரீகிக் கிடைத்தது.
Related Cricket News on The world cup
-
சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்றார் மெஸ்ஸி!
நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஆர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்றார். ...
-
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கிரஹாம் ரீட் விலகல்!
ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் இந்த தோல்விக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரீட் விலகி உள்ளார். உலகக் கோப்பை தொடர் நேற்று முடிந்த நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஜெர்மனி!
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி அணி, 3ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஹாக்கி உலக கோப்பை தொடரில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: காலிறுதிக்கு கொரியா, ஜெர்மனி அணிகள் முன்னேற்றம்!
ஹாக்கி உலக கோப்பையில் நேற்று நடந்த 2 கிராஸ் ஓவர் போட்டிகளில் கொரியா மற்றும் ஜெர்மனி அணிகள் வெற்றி பெற்றன. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: இந்தியாவின் கனவை கலைத்த நியூசிலாந்து; ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடந்த க்ராஸ் ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு மீண்டும் தகர்ந்துள்ளது. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: வேல்ஸை வீழ்த்தியது இந்தியா!
ஹாக்கி உலக கோப்பையில் வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: சிலியை பந்தாடி காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து!
சிலி அணிக்கெதிரான ஹாக்கி உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 14-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: ஜப்பானை வீழ்த்தியது தென் கொரியா!
ஜப்பான் அணிக்கெதிரான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஆட்டத்தில் தென் கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை 2023: இந்தியா - இங்கிலாந்து போட்டி டிரா!
ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கோலின்றி டிராவில் முடிவடைந்தது. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை 2023: இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை!
ஒடிசாவில் நடைபெற்று வரும் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை 2023: ஸ்பெயினை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!
ஹாக்கி உலக கோப்பை முதல் போட்டியில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று, உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை 2023: கோப்பை வென்றால் வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசு அறிவிப்பு!
உலக கோப்பையை இந்தியா வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார். ...
-
சோகத்திலிருந்து மீண்டு, திரும்ப வருவோம் - கிலியன் எம்பாப்பே!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸின் வெற்றிக்காக கடுமையாக போராடிய கிலியன் எம்பாப்பே, உலக கோப்பை தோல்விக்கு பின், திரும்ப வருவோம் என்று உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24