%E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2023
ஐபிஎல் 2023: ஒரே போட்டியில் பல சாதனைகளை குவித்த ஆகாஷ் மத்வால்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றன. முதல் தகுதிப்போட்டியில் குஜராத்டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தி மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது தகுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன. அந்த போட்டியில் ஜெயிக்கும் அணி ஃபைனலில் வரும் 28ம் தேதி சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.
எலிமினேட்டரில் லக்னோவிற்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் 5 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவியதுடன் சாதனைகளை வாரிக்குவித்தார். ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மாதிரியான வீரர்களை அடையாளம் காட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, இப்போது திலக் வர்மா, நேஹல் வதேரா, ஆகாஷ் மத்வால் ஆகிய திறமைசாலிகளை அடையாளம் காட்டியுள்ளது.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2023
-
ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி இருக்கக் கூடாதா என மிகவும் விருப்பப்படுகிறேன் - இர்ஃபான் பதான்!
நான் ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி இருக்கக் கூடாதா என மிகவும் விருப்பப்படுகிறேன் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் - நவீன் உல் ஹக்!
லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் குறித்து அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
WTC 2023: அனைத்து திட்டங்களும் தங்களிடம் தயாராக உள்ளது - முகமது ஷமி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் தயாராக உள்ளது என்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
கோலி பெயரைச் சொல்லி கோஷமிடுவதை நான் ரசிக்கிறேன் - நவீன் உல் ஹக் !
மைதானத்தில் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரைச் சொல்லி என்னைப் பார்த்து கோஷமிடுவதை நான் ரசிக்கிறேன் என லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
மாம்பழத்தை வைத்து நவீன் உல் ஹக்கை வம்பிழுக்கு ராசிகர்கள்!
நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்து வெளியேறியதால் மும்பை வீரர்கள் சந்திப் வாரியர், குமார் கார்த்திகேயா, விஷ்ணு வினோத் ஆகியோர் மேஜையில் 3 மாம்பழத்தை வைத்து நவீன் உல் ஹக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளனர். ...
-
நான் என்னை யாருடனும் ஒப்பிட்டுக் கொள்ள மாட்டேன் - ஆகாஷ் மத்வால்!
ஜஸ்ட்பிரித் பும்ரா அவரது லெவலில் இருக்கிறார். நான் என்னுடைய சொந்தத் திறமையில் இருக்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஆகாஷ் மத்வால் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்விக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் - குர்னால் பாண்டியா!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்ததற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இதைத்தான் செய்து வருகிறோம் - வெற்றி குறித்து ரோஹித்!
இம்முறை ஆர்ச்சருக்கு காயம் ஏற்பட்டு வெளியேறியதால் அவருக்கு பதிலாக ஆகாஷ் மத்வாலை அணிக்குள் கொண்டு வந்தோம். அவரும் மிகச்சிறப்பாக பந்துவீசி அசத்தியுள்ளார் என மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: மத்வால் அபாரம்; லக்னோவை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று : முக்கிய வீரர்களின்றி களமிறங்கும் நெதர்லாந்து!
ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கான 15 பேர் அடங்கிய நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: லக்னோவுக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கான 15 பேர் அடங்கிய அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டேவிட் வார்னர் முக்கிய பங்கு வகிப்பார் - ஆண்ட்ரூ மெக்டொனல்ட்!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக முக்கியப் பங்கு வகிப்பார் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டோனல்ட் நம்பிக்கை தெரிவித்தார். ...
-
நேரத்தை வீணடித்த தோனி; நடுவர்களை கடுமையாக விமர்சித்த பிராட் ஹக்!
சாதுரியமாக விதிமுறையை மீறிய தோனியை தட்டி கேட்காமல் நடுவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24