m mohammed
எனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் இவர் தான் - முகமது ஷமி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்தார். இதன் காரணமாக அவர் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த முகமது ஷமி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரி 17ஆவது சீசனிலிருந்தும் விலகியதுடன், நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார்.
இந்நிலையில் தான் தற்சமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகின. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள ஷமி உடல் நலம் தேறி வருகிறார். மேலும் அவர் தனது உடற்தகுதியில் ஊக்கமளிக்கும் அறிகுறிகள் இருந்தபோதிலும், அணி நிர்வாகம் எச்சரிக்கையுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்குள் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிசிஐ தொடர்ந்து அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
Related Cricket News on m mohammed
-
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ரவீந்திர ஜடேஜா விலகல்!
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று போட்டிகளில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விடுவிப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ...
-
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணி இந்த இரு வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இரு வீரர்களை மட்டுமே பெங்களூரு அணி தக்கவைத்துக் கொள்ள விரும்புவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ள முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணியில் இடம்பிடிக்க காத்திருக்கும் இந்திய வீரர் முகமது ஷமி தற்போது பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வரும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதனை பட்டியளில் இணைந்த சிராஜ்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சாதனை பட்டியளில் இணைந்துள்ளார். ...
-
SL vs IND, 2nd ODI: முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய சிராஜ்; வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தொடக்க வீரர் பதும் நிஷங்கா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தி கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஹைதராபாத்தில் முகமது சிராஜுக்கு உற்சாக வரவேற்பு - வைரலாகும் காணொளி!
டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு அவரது சொந்த ஊரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்துள்ளனர். ...
-
ரோஹித், விராட் ஓய்வு முடிவு அதிர்ச்சியளிக்கிறது - முகமது ஷமி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முகமது ஷமி?
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த சிராஜ் - வைரலாகும் காணொளி!
அமெரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
முகமது சிராஜிற்கு ஓய்வளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
தொடர்ந்து சொதப்பி வரும் முகமது சிராஜிற்கு ஒரு சில போட்டிகளில் ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் முகமது அமீர்; பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்குமா?
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். ...
-
முகமது ஷமிக்கு மாற்றாக தமிழக ரஞ்சி அணி வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகமது ஷமிக்கு பதிலாக தமிழக ரஞ்சி அணி வீரர் சந்தீப் வாரியரை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47