rashid khan
SL vs AFG: ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஷித் கானுக்கு ஓய்வு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 02ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது. மேலும் இலங்கை அணிக்கெதிராக ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் நட்சத்திர வீரர் ரஷித் கான் அணியில் இடம்பிடிக்கவில்லை. இருப்பினும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியில் இக்ராம் அலிகில், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா போன்ற நட்சத்திர வீரர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.
Related Cricket News on rashid khan
-
பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய ரஷித் கான்; ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா?
காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தினால் நடப்பாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் ரஷித் கான் அறிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கெதிரான திட்டம் தங்களிடம் உள்ளது - ஜொனதன் டிராட்!
கடந்த 2 போட்டிகளில் செய்த தவறுகளில் பாடத்தை கற்றுக் கொண்டு ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு போராடும் என்று பயிற்சியாளர் ஜொனதன் டிராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ரஷித் கான் முழு உடல் தகுதியுடன் இல்லை - இப்ராஹிம் ஸத்ரான்!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் விலகியுள்ளார். ...
-
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அணிக்கு வந்த பின்னரே வீரர்கள் திறமையை வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது - ரஷீத் கான்!
ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றி குறித்து பேச வார்த்தையே என்னிடம் இல்லை - பாட் கம்மின்ஸ்!
மேக்ஸ்வெல் விடாப்பிடியாக இந்த போட்டியை களத்தில் நின்று முடித்து கொடுக்க வேண்டும் என்று உள்ளே நின்று பேட்டிங் செய்தார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தனி ஒருவனாக அணியை வெற்றிக்கு அழைச்சென்ற மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான பரபரப்பான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சச்சினின் ஆலோசனை சதமடிக்க உதவியது - இப்ராஹிம் ஸத்ரான்!
ஆப்கானிஸ்தானுக்கு உலக கோப்பையில் முதல் முறையாக சதமடித்த வீரராக அசத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன் என இப்ராஹிம் ஸத்ரான் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இப்ராஹிம் ஸத்ரான் அபார சதம்; ஆஸிக்கு 292 டார்கெட்!
ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒட்டுமொத்த ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்கும் இது பெருமை - முகமது நபி!
10-12 ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு பெரிய வெற்றிக்காக தான் நாங்கள் காத்திருந்தோம். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இத்தனை ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என ஆஃப்கானிஸ்தான் அணியின் அனுபவ வீரரான முகமது நபி கூறியுள்ளார். ...
-
ஆஃப்கான் வெற்றியை ரஷித் கானுடன் நடனமாடி கொண்டாடிய இர்ஃபான் பதான்!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆஃப்கானிஸ்தானின் வெற்றியை அந்த அணியின் ரஷித் கானுடன் இணைந்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் நடனமாடி கொண்டாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எதிர்வரும் போட்டிகளிலும் இதே வெற்றியை தொடர்வோம் - டாம் லேதம்!
மிட்சல் சான்ட்னர் தனது வேலையை தற்போது சிறப்பாக செய்து வருகிறார். அவர் ஒரு ஆல் ரவுண்டராக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார் என்று நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசியை கரைசேர்த்த லேதம், பிலீப்ஸ்! ஆஃப்கானுக்கு 289 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஷித் கான்!
மைதானத்திற்கு வந்து எங்களை ஆதரித்து போட்டி முழுவதும் சிறப்பாக செயல்பட வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24