sanju samson
கோப்பையை வென்ற இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்ட சஞ்சு சாம்சன்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.
இதனையடுத்து வெற்றிக் கோப்பையுடன் இன்று அதிகாலையில் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தங்கும் விடுதி வரை வழியெங்கும் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் இந்திய வீரர்கள் நடுனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
Related Cricket News on sanju samson
-
அணிக்கு தேர்வான மகிழ்ச்சியில் செல்போன் & பாஸ்போர்ட்டை மறந்து விட்டேன்; ரியான் பராக் ஓபன் டாக்!
ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வான மகிழ்ச்சியில் தனது பாஸ்போர்ட் மற்றும் செல்போனை மறந்துவிட்டதாக ரியான் பராக் கூறிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற 4 இந்திய வீரர்கள்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ZIM vs IND: முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ZIM vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஷிவம் தூபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில்லிற்கு கேப்டன் பொறுப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
வரும் நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
விராட் கோலி தனது மகத்துவத்தை காட்டுவார் - வாசிம் ஜாஃபர்!
நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவதற்குள் இந்திய அணி வீரர் விராட் கோலி தனது உண்மையான திறனையும், தனது மகத்துவத்தையும் வெளிப்படுத்துவார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
தூபேவிற்கு பதில் சாம்சன் விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு!
அமெரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஷிவம் தூபேவிற்கு பதில் சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
தூபேவிற்கு பதில் சாம்சனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
உலகக்கோப்பை போட்டிகளில் ஷிவம் தூபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
என் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறந்த விஷயங்களில் இதுவும் ஒன்று - சஞ்சு சாம்சன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார். ...
-
சாம்சனை விட பந்த் சிறந்த விக்கெட் கீப்பர் - சுனில் கவாஸ்கர்!
விக்கெட் கீப்பிங் திறமையை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்தால் சஞ்சு சாம்சனை விட ரிஷப் பந்த் சிறப்பானவராக இருக்கிறார் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
‘இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது’ - இந்திய வீரர்களுக்கு முகமது கைஃப் எச்சரிக்கை!
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் வீரர் முகமது கைஃப் எச்சரிக்கை கொடுத்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் இந்திய வீரர்கள்!
வங்கதேச அணிக்கு எதிராக நாளை பயிற்சி போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுவரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவேன் - ரியான் பராக்!
எனது அணி என் மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்ந்து ஆதரித்தது. அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் இந்த சீசன் மூலம் பூர்த்தி செய்துள்ளேன் என்று ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24