Advertisement
Advertisement
Advertisement

ss vs lkk

TNPL 2023: Lyca Kovai Kings scored 179/6 against IDream Tiruppur Tamizhans!
Image Source: Google
Advertisement

TNPL 2023: ஐபிஎல் ஃபார்மை தொடரும் சாய் சுதர்சன்; திருப்பூர் அணிக்கு 180 டார்கெட்!

By Bharathi Kannan June 12, 2023 • 21:11 PM View: 351

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகமலாக இன்று தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய கோவை அணிக்கு சச்சின் - சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சுரேஷ் குமார் 11 ரன்களிலும், சச்சின் 2 ரன்களிலும், ராம் அரவிந்த் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் - முகிலேஷ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

Related Cricket News on ss vs lkk