3rd test
PAK vs ENG, 3rd Test: பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக தார் ரோடு போல இருந்த ராவில்பிண்டி பிட்ச்சில் டி20 இன்னிங்ஸ் விளையாடி வெற்றி கண்ட அந்த அணி சுழலுக்கு சாதகமாக அமைந்த முல்தானிலும் அதிரடி வெற்றி பெற்றது.
மறுபுறம் ஆஸ் திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலேயே இங்கிலாந்திடம் அடி வாங்கி கோப்பையை கோட்டை விட்ட பாகிஸ்தான் சொந்த மண்ணிலும் மண்ணை கவ்வி கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி டிசம்பர் 17ஆம் தேதியன்று கராச்சியில் தொடங்கியது. அதில் வென்று குறைந்தபட்சம் வைட்வாஷ் தோல்வியை தவிர்த்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 304 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Related Cricket News on 3rd test
-
PAK vs ENG, 3rd Test: அறிமுக டெஸ்டில் அசத்திய ரிஹன் அஹ்மத்; வைட் வாஷ் கனவில் இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால், நிச்சயம் பாகிஸ்தானை வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
டக் அவுட்டாகினாலும் ரசிகர்களின் கரகோஷத்துடன் வெளியேறிய அசார் அலி!
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள அசார் அலிக்கு, கடைசி இன்னிங்சில் அவுட்டாகி சென்றபோது இங்கிலாந்து வீரர்கள் ஓடிவந்து மரியாதை நிமித்தமாக கைகுலுக்கி வாழ்த்துக்களை கூறினர். ...
-
PAK vs ENG, 3rd Test: ஜேக் லீச் அபாரம்; தடுமாற்றத்தில் பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
PAK vs ENG, 3rd Test: ஹாரி ப்ரூக் அபார சதம்; இங்கிலாந்து அணி முன்னிலை!
பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்துள்ளது. ...
-
PAK vs ENG, 3rd Test: ஜோ ரூட் ஏமாற்றம்; ஹாரி ப்ரூக் அசத்தல்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs ENG, 3rd Test: 304 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்; தொடக்கத்தில் தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
ENG vs SA, 3rd Test: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டிக்கு பின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை பார்ப்போம். ...
-
ENG vs SA, 3rd Test: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது. ...
-
ENG vs SA, 3rd Test: வெற்றிக்கு அருகில் இங்கிலாந்து!
3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 130 ரன்கள் என்ற எளிய இலக்கை தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs SA: காயம் காரணமாக கடைசி டெஸ்டிலிருந்து வேண்டர் டுசென் விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ரஸ்ஸி வெண்டர் டுசென் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
ஸ்டோக்ஸ், சேவாக் சாதனையை முறியடித்த பேர்ஸ்டோவ்!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையை ஜானி பேர்ஸ்டோவ் படைத்துள்ளார். ...
-
ENG vs NZ, 3rd Test: பேர்ஸ்டோவ், ரூட் அதிரடியால் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
ENG vs NZ, 3rd Test: இங்கிலாந்தின் வெற்றியை நோக்கி நகரும் லீட்ஸ் டெஸ்ட்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs NZ, 3rd Test: தடுமாற்றத்தில் நியூசிலாந்து; மீண்டும் அசத்துவாரா மிட்செல்!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47