An icc
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் அலெக்ஸ் ஹேல்ஸ்!
இங்கிலாந்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். கடந்த 2011ஆம் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் அதிரடியான டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக தன்னை அறிமுகப்படுத்தி குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தினார். குறிப்பாக 2014இல் ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் 2015 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் முதன்மை வீரராக விளையாடினார்.
அதை தொடர்ந்து 2016 டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக 116 ரன்கள் அடித்த அவர் டி20 கிரிக்கெட்டிலும் உலக கோப்பையிலும் சதமடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற இரட்டை சாதனைகளை படைத்து 2019 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியானவராக இருந்தார். இருப்பினும் 2017இல் ஒரு விடுதியில் இரவு நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதால் அந்த இருவருக்குமே இங்கிலாந்து வாரியம் அதிரடியாக தடை விதித்தது. அதில் பென் ஸ்டோக்ஸ் குறைந்த ரகளை மட்டுமே செய்தது நிரூபிக்கப்பட்டதால் அபராதத்துடன் தப்பிய நிலையில், அலெக்ஸ் ஹேல்ஸ் அபராதம் மட்டுமல்லாமல் 12 மாதங்கள் அதிரடியான தடையும் பெற்றார்.
Related Cricket News on An icc
-
உலகக்கோப்பை 2023: அட்டவணை மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கிய பாகிஸ்தான்!
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான தேதி மாற்றம் செய்யப்படவுள்ளது. ...
-
இந்திய அணிக்கு தான் மிகப்பெரும் அழுத்தம் உள்ளது - வாசிம் அக்ரம்!
இதர அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை இந்திய அணி குறித்து முகமது கைஃப் ஓபன் டாக்!
பும்ரா விளையாடவில்லை என்றால் இந்தியாவுக்கு உள்நாட்டிலேயே உலகக் கோப்பை மிகவும் கடினமானதாக இருக்கும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: உஸ்மான் கவாஜா அதிருப்தி!
நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தாமதமாக பந்துவீசியதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஐசிசி அபாராதம் விதித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: பின்னடைவை சந்தித்த விராட், ரோஹித்!
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பின்னடவை சந்தித்துள்ளனர். ...
-
விக்கெட் கீப்பிங் பயிற்சியில் கேஎல் ராகுல் - வைரல் காணொளி!
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; பாகிஸ்தான், இந்தியா முன்னிலை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியளில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் முதலிரு இடங்களைப் பிடித்துள்ளன. ...
-
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - ஈயன் மோர்கன்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தரப்பில் எந்த அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் கணித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!
ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆனாலும் அவர் விளையாடும் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் போட்டி அட்டவணை மாற்றம்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை 2023 போட்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் பெரிய விஷயம்தான், ஆனால் அது வீரர்களை கெடுத்துவிடுகிறது - கபில் தேவ்!
பும்ராவுக்கு என்ன ஆயிற்று? அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன்னை மீட்டெடுத்து வருகிறார். ஆனால், அவரால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை என கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
இதுதான் அவருக்கான கடைசி வாய்ப்பு - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரே சூர்யகுமார் யாதவுக்கான கடைசி வாய்ப்பாக பார்க்கிறேன் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்த நடத்தும் 9ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடக்கம்?
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24