As abhishek
ஐபிஎல் 2024: மீண்டும் சிக்ஸர் மழை பொழிந்த ஹைதராபாத் பேட்டர்கள்; டெல்லி அணிக்கு 267 ரன்கள் இலக்கு!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் டேவிட் வார்னர், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இந்த இன்னிங்ஸின் முதல் ரன்களையே சிக்ஸரின் மூலம் பெற்ற டிராவிஸ் ஹெட் அதன்பின் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் சர்மா கிடைக்கும் பந்துகளில் தனது பங்கிற்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Related Cricket News on As abhishek
-
ஓவருக்கு ஓவர் பறந்த சிக்ஸர்கள்; வரலாற்று சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 6 ஓவர்களில் 125 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புதிய வரலாற்று சாதனை படைத்த அபிஷேக் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் இளம் வீரர் அபிஷேக் சர்மா 1000 ரன்களை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
யுவராஜ் சிங், பிரையன் லாரா மற்றும் எனது அப்பாவிற்கு நன்றி - அபிஷேக் சர்மா!
பவர்பிளே ஓவர்களில் நாங்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எங்களால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று எண்ணினோம் என ஆட்டநாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
அபிஷேக் சர்மாவுக்கு பந்துவீச ஒருபோதும் விரும்ப மாட்டேன் - பாட் கம்மின்ஸ்!
அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு எதிராக பந்துவீச ஒருபோதும் நான் விரும்ப மாட்டேன் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஐடன் மார்க்ரம் அரைசதம்; சிஎஸ்கேவை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
4,0,6,0,6,6,4 - முகேஷ் சௌத்ரியை பந்தாடிய அபிஷேக் சர்மா - வைரலாகும் காணொளி!
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா ஒரே ஓவரில் 27 ரன்களை குவித்த காணொளி வைரலாகியுள்ளது. ...
-
SMAT 2023: பரோடாவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது பஞ்சாப்!
பரோடா அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SMAT 2023: ஆந்திராவை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்!
ஆந்திரா அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அமித் மிஸ்ராவுடன் ரோஹித் சர்மா கலகலப்பான உரையாடல்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரது கலகலப்பான உரையாடல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பெரிய வீரர்கள் விளையாட முடிவு செய்தால் இளம் வீரர்கள் தங்கள் இடத்தை இழப்பார்கள் - அபிஷேக் நாயர்!
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட முடிவு செய்யும் பொழுது, அந்த இடத்தில் நன்றாக செயல்பட்டு வரும் இளம் வீரர்கள் விளையாட முடியாமல் போகிறது என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் விஷயத்தில் இந்திய அணியின் முடிவுகள் ஆச்சரியமளிக்கின்றன - அபிஷேக் நாயர்!
பிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் வழக்கமாக மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்பவர். அவர் இடது கையா வலது கையா என்பது இங்கு முக்கியமே கிடையாது என்று முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் விமர்சித்துள்ளார். ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் நேபாள் ஏ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: கௌசிக் காந்தி அரைசதம்; முதல் வெற்றியைப் பெற்றது சேலம் ஸ்பார்ட்டன்ஸ்!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அந்த ஒரு ஓவர்தான் எங்களது அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது - குர்னால் பாண்டியா!
அபிஷேக் சர்மா வீசிய அந்த ஒரு ஓவரின் போது ஆட்டம் முழுவதுமாக எங்கள் பக்கமாக மாறியது என லக்னோ அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47