As india
IND vs AFG, 1st T20I: போட்டியிலிருந்து விலகிய விராட் கோலி!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராக உதவும் இத்தொடரில் இந்தியாவின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 14 மாதங்கள் கழித்து இந்த டி20 தொடரில் தேர்வாகியுள்ளார்.
கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடியிருந்த அவர்கள் மேற்கொண்டு டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வந்தனர். அதனால் அவர்களின் டி20 கேரியர் முடிந்ததாகவும் 2024 டி20 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்றும் செய்திகள் வெளியானது ரசிகர்களை சோகமடைய வைத்தது. அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான புதிய இளம் அணி விளையாடும் என்றும் செய்திகள் வலம் வந்தன.
Related Cricket News on As india
-
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான புதிய சாதனை படைக்கவுள்ள விராட் கோலி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீரர் விராட் கோலி 35 ரன்களை அடிக்கும் பட்சத்தில், டி20 கிரிக்கெட்டில் 12ஆயிரம் ரன்களை அடிக்கும் முதல் இந்திய வீரர் எனும் சாதனையை படைக்கவுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடிக்கவுள்ள ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற எம் எஸ் தோனியின் உலக சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்வதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. ...
-
INDW vs AUSW, 3rd T20: அலிசா ஹீலி, பெத் மூனி அரைசதம்; டி20 தொடரையும் வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
ரோஹித் சர்மா டான் பிராட்மண் போல் விளையாடக் கூடியவர் - மாண்டி பனேசர்!
இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs AUSW, 3rd T20: ஆஸ்திரேலியாவுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு பெரிய சவாலை கொடுப்பார் - மாண்டி பனேசர்!
மொபைல் ஆப் போல 6 மாதத்திற்கு ஒருமுறை எதிரணிகளின் பலத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தன்னை அப்டேட் செய்து கொள்ளும் ரவிச்சந்திரன் அஸ்வின் இத்தொடரில் இங்கிலாந்துக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்று முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார். ...
-
விராட், ரோஹித்திடமிருந்து அணி நகர்ந்து விட்டது என்று நினைத்தேன் - தீப்தாஸ் குப்தா!
தற்போது மீண்டும் இந்த சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்திய அணி வாருங்காலத்தை நோக்கி செல்வதற்கான முடிவை எடுக்கவில்லை என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
அடுத்த 3 வாரங்களில் இந்திய மைதானங்கள் மீது விமர்சனங்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
அடுத்த 3 வாரங்களில் அதிகமாக சிணுங்கி புலம்பக்கூடிய அணிக்கு எதிராக இந்தியாவில் மிகப்பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அவர்களுக்கு இங்குள்ள மைதானங்கள் பொருத்தமாக இருக்காது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ருதுராஜ் கெய்க்வாட்!
காயம் காரணமாக, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரிலிருந்து வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட் இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
INDW vs AUSW, 3rd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
ஆஸ்திரேலியா டி20 தொடரில் துணை கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், நட்சத்திர வீரர் இஷான் கிஷன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
முதலிரண்டு டெஸ்டிலிருந்து விலகும் முகமது ஷமி?
காலில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சை பெற்று வரும் முகமது ஷமி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
INDW vs AUSW, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது. ...
-
INDW vs AUSW, 2nd ODI: தீப்தி சர்மா சிறப்பான ஆட்டம்; ஆஸ்திரேலியாவுக்கு 131 டார்கெட்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47