Cricket
இந்தியா vs இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மீண்டும் பிளெயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு இங்கிலாந்து அணி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதேசமயம் இந்திய அணியைப் பொறுத்தவரை கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெலும், நான்காம் இடத்தில் ராஜத் பட்டிதாரும் விளையாடுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளதால் அனுபவமில்லாத இந்திய அணி எப்படி இங்கிலாந்தை சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Cricket
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்!
டபிள்யூபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனில் விளையாடும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
IND vs ENG, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு களமிறங்கவுள்ளது. ...
-
எப்போதும் போல் இதுவும் ஒரு போட்டி தான் - பென் ஸ்டோக்ஸ்!
ஒவ்வொரு டெஸ்டும் அடுத்த போட்டியைப் போல் முக்கியமானது. என்னைப் பொறுத்தவரையில் இதுவும் எனக்கு மேலும் ஒரு போட்டிதான் என 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக் கோப்பை தொடரை வைத்து பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்; ஐபிஎல் வீரர்களுக்கு செக்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் இரு குழுக்களாக அனுப்படவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2024 எலிமினேட்டர்: அபுதாபி நைட் ரைடர்ஸை வீழ்த்தி துபாய் கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 எலிமினேட்டர் சுற்றில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
NZ vs SA, 2nd Test: நியூசிலாந்தை 211 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 211 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் போல்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐஎல்டி20 2024 எலிமினேட்டர்: நைட் ரைடர்ஸ் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேப்பிட்டல்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 189 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சௌரவ் கங்குலியுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒப்பிட்ட இர்ஃபான் பதான்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்ப்பதற்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியைப் பார்பது போல் உள்ளதாக முன்னள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார். ...
-
இலங்கை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்!
இலங்கை தொடருக்கான வங்கதேச ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளது - ஒல்லி போப்!
ராஜ்கோட் மைதானத்தில் புற்கள் இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளதாக அந்த அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர பயிற்சியில் சர்ஃப்ராஸ், ஜுரெல்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜனவரி மாதத்திற்கான விருதை வென்றார் ஷமார் ஜோசப்!
ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக வெஸ்ட் இண்டீஸின் ஷமார் ஜோசப்பும், சிறந்த வீராங்கனையாக அயர்லாந்தின் ஏமி ஹண்டரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
AUS vs WI, 3rd T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47