Cricket news
IND vs AUS, 1st Test: ரோஹித் சர்மா மற்றவர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார் - இர்ஃபான் பதான்!
நேற்று நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி ஆடுகளம் குறித்து போட்டி துவங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய தரப்பில் இருந்து எக்கச்சக்க குற்றச்சாட்டுகள் எழும்பி இருந்தது. போட்டிக்கு முந்தைய நாள் ஆடுகளத்தின் புகைப்படங்கள் வெளியாக, ஆஸ்திரேலிய இடதுகை பேட்ஸ்மேன்களை குறி வைத்து ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டுகள் வைத்ததோடு இதில் ஐசிசி தலையிட வேண்டுமென்ற அளவுக்கு போனார்கள்.
நேற்று டாஸ் வென்று ஆஸ்திரேலியா விளையாடி 177 ரன்களில் அடங்கிவிட்டது. அவர்கள் விளையாடிய பொழுது ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பது போல் தெரிந்தது. ஆனால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளையாடிய பொழுது அப்படி எதுவுமே தெரியவில்லை. மிகச் சிறப்பாக விளையாடி 212 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் இந்திய அணியின் இடதுகை வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் அரை சதங்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் அசத்தியிருக்கிறார்கள்.
Related Cricket News on Cricket news
-
ரஞ்சி கோப்பை 2023/23: ஜாக்சன், வசவாடாவின் சதங்களால் மீண்ட சௌராஷ்டிரா!
ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை குவித்த நிலையில், ஷெல்டான் ஜாக்சன் மற்றும் வசவாடாவின் அபாரமான சதங்களால் 4 விக்கெட் இழப்பிற்கு சௌராஷ்டிரா அணி 364 ரன்களை குவித்துள்ளது. ...
-
IND vs AUS: அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்த டார் மர்ஃபி!
ஆஸ்திரேலிய ஸ்பின்னர் டாட் மர்ஃபி, அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்திய இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் டென்னிஸ் லில்லிக்கு அடுத்து 2ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
IND vs AUS, 1st Test: ஜடேஜா, அக்ஸர் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சஞ்சய் மஞ்ச்ரேக்கரை சாடிய முரளி விஜய்; இணையத்தில் பரபரப்பு!
தென்னிந்திய வீரர்களை சில முன்னாள் மும்பை வீரர்கள் பாராட்டுவதில்லை என இந்திய முன்னாள் வீரர் முரளி விஜய் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
IND vs AUS, 1st Test: சதமடித்து சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மற்ற இந்திய வீரர்கள் தடுமாறிய நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தியிருக்கிறார். ...
-
பந்தை சேதப்படுத்தினாரா ஜடேஜா? இந்திய அணியின் விளக்கம்!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் அதுகுறித்த விசாரணை நடைபெற்றுள்ளது. ...
-
IND vs AUS, 1st: வர்ணனையில் அனல் பறந்த விவாதம்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது வர்ணனையில் இருந்த தினேஷ் கார்த்திக், மார்க் வாக், ரவி சாஸ்திரி ஆகியோரது அனல் பறந்த விவாதம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
IND vs AUS, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த இந்தியா; அதிரடி காட்டும் ரோஹித் - கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்கா - இலங்கை இன்று மோதல்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
ஐஎல்டி20 எலிமினேட்டர்: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 எலிமினேட்டர் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
SA20 League 2nd SF: ஹென்றிக்ஸ் போராட்டம் வீண்; ஜேஎஸ்கேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் அரையிறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்துள்ள டெஸ்ட் வீரர்கள் பட்டியளில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
தொடரை வெல்லத்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம், நாங்கள் மீண்டு வர முயற்சிப்போம் - மார்னஸ் லபுசாக்னே!
நான் இன்று இங்கு விளையாடிய சில ஷாட்கள் நிச்சயமாக விராட் கோலியிடமிருந்து கற்றுக் கொண்டதுதான் என மார்னஸ் லபுசாக்னே தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வினுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள அஸ்வினை முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47