Cricket team
நான் ஒரு கோப்பையை வென்றதுடன் நிறுத்தப் போவதில்லை - ரோஹித் சர்மா!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
இந்நிலையில், சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருது நேற்று வழங்கப்பட்டது. அதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆடவருக்கான சர்வதேச கிரிக்கெட்டருக்கான விருது வழங்கப்பட்டது. மேற்கொண்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி மற்றும் விராட் கோலி உள்ளிட்டோருக்கும் சியட் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய ரோஹித் சர்மா, முடிவுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் அணியில் மாற்றங்களைச் செய்வது எனது கனவாக இருந்ததாக கூறியுள்ளார்.
Related Cricket News on Cricket team
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?
எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
நியூசிலாந்து தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தனது ஆல் டைம் சிறந்த உலக லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடன் விளையாடிய வீரர்களைக் கொண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சிறந்த உலக லெவனை அறிவித்துள்ளார். ...
-
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் சாதனையை தகர்க்க காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெறவுள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடரின் வெற்றியாளரை கணித்த ஆடம் கில்கிறிஸ்ட்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கணித்துள்ளார். ...
-
வீரர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க விரும்புகிறோம் - ஷான் மசூத்!
நாங்கள் வீரர்களை ஆதரிக்க முயற்சிப்போம். அவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் - தினேஷ் கார்த்திக் உறுதி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் - ரிக்கி பாண்டிங்!
தற்போது சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SL, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளடு. ...
-
இலங்கை டெஸ்ட் தொடரில் சில சாதனைகளை தகர்க்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதன் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
PAK vs BAN, 1st Test: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கு ரன்களை எடுப்பது சவாலானது - சனத் ஜெயசூர்யா!
எங்களுக்கு தேவையான பணியாளர்கள் எங்களிடம் உள்ளனர், ஆனாலும் இத்தொடரை வெற்றிபெற நாங்கள் கடுமையாக போராட வேண்டும் என்று இலங்கை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். ...
-
எனது வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் - கருண் நாயர்!
லீக் ஆட்டமாக இருந்தாலும் சரி, உள்நாட்டு ஆட்டமாக இருந்தாலும் சரி, முன்னோக்கி பார்க்க வேண்டாம் என்று கற்றுக்கொண்டேன் என இந்திய வீரர் கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாடிருக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
துலீப் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47