Cricket team
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம், நியூசிலாந்து & இங்கிலாந்து!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இத்தொடரை தொடர்ந்து இந்திய அணியானது ஜிம்பாப்வே மற்றும் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
இந்நிலையில் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான இந்திய அணி தங்களுடையை சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களின் அறிவிப்பினை பிசிசிஐ இன்றைய தினம் அறிவித்துள்ளது. அந்தவகையில் வங்கதே அணியானது வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
Related Cricket News on Cricket team
-
காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய பிராண்டன் கிங்; விண்டீஸுக்கு பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தின் போது காயமடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராண்டன் கிங், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்தும் விலகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்!
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ...
-
குல்தீப் யாதவை இந்திய அணி பயன்படுத்த வேண்டும் - ஸ்டீபன் ஃபிளெமிங்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் அக்ஸர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார். ...
-
ரசிகரை தாக்க முயன்ற ஹாரிஸ் ராவுஃப்; இணையத்தில் வைரலான காணொளி குறித்து விளக்கம்!
தன்னை விமர்சித்த ரசிகரை தாக்க முயன்றதாக காணொளி வெளியாக வைரலான நிலையில், அதற்கான விளக்கத்தை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்துடனான எனது கடைசி நாள் - டிரென்ட் போல்ட் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
பிஎன்ஜி அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட், இது நியூசிலாந்துடனான எனது கடைசி நாள் என்பது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை - கேரி கிரிஸ்டன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் வீரர்களிடையே ஒற்றுமை இல்லை என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட்!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுடன் நெதர்லாந்து அணி வெளியேறியதை அடுத்து, அந்த அணியின் ஆல் ரவுண்டர் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
எனது கேப்டன்சி குறித்த முடிவை பிசிபி தான் எடுக்கும் - பாபர் ஆசாம்!
கேப்டன் பதவியில் இருந்து விலக நேரிட்டால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். எதற்கும் பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டேன் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: ஹசரங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்த லமிச்சானே!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை நேபாள் அணி வீரர் சந்தீப் லமிச்சானே படைத்துள்ளார். ...
-
இரு வேறு நாடுகளுக்காக சதமடித்து தனித்து சாதனை பட்டியலில் இணைந்த ஜோ பர்ன்ஸ்
ருமேனியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இத்தாலி அணிக்காக சதமடித்து அசத்திய ஜோ பர்ன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் தலைமை பயிற்சியாளராக பதவியேற்கும் கம்பீர்?
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
INDW vs SAW: சதமடித்த சாதனைகளை குவித்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47