Cricket
மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ரேனுகா அபாரம்; வங்கதேசத்தை பந்தாடி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்படி வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் திலாரா அக்தர் 6 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய இஷ்மா தஞ்சிம் 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை முர்ஷிதா கதுமும் 4 ரன்களுடன் நடைடைக் கட்டினார். இதனால் வங்கதேச மகளிர் அணி 21 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Cricket
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை vs பாகிஸ்தான், இரண்டாவது அரையிறுதி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: வங்கதேசத்தை 80 ரன்களில் சுருட்டியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணி 81 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
மேக்ஸ்வெல் விளாசிய 103 மீட்டர் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
வீரர்கள் யாரும் ஓய்வறையில் தூங்கவில்லை - ஹபீஸின் கருத்தை பொய்யாக்கிய ஹசன் அலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஓய்வறையில் தூக்கவில்லை என ஹபீஸின் குற்றச்சாட்டிற்கு ஹசன் அலி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: இந்திய அணியில் இடம்பிடிக்கும் அர்ஷ்தீப் சிங்?
எதிர்வரவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக மாறும் வாசிம் ஜாஃபர்!
எதிர்வரவுள்ள ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
MLC 2024: டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது வாஷிங்டன் ஃப்ரீடம்!
Major League Cricket 2024: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ENG vs WI, 3rd Test: அணியில் மாற்றங்கள் செய்யாதது குறித்து பென் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்யாதது குறித்து அந்த அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளக்கமளித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது - ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
IRE vs ZIM, Only Test: ஜிம்பாப்வே 210 ரன்களில் சுருட்டியது அயர்லாந்து!
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
கௌதம் கம்பீரின் திட்டம் மிக தெளிவாக உள்ளது - ஷுப்மன் கில்!
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன் டி20 போட்டிகளில் எனது செயல்பாடு எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை என இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs WI, 3rd Test: போட்டியில் இருந்து விலகிய கெவின் சின்க்ளேர்; ஷமார் ஜோசப் விளையாடுவதும் சந்தேகம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவின் சின்க்ளேர் விலகியுள்ளதாக அந்த அணி அறிவித்துள்ளது. ...
-
தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்ட கேஎல் ராகுல்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கேஎல் ராகுல் வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24