Fa cup
உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக நடபெற்று வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடரில் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு உலகின் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Related Cricket News on Fa cup
-
என்னை விமர்சித்தவர்களுக்கான பதிலடியாக இதனை பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
கடந்த சில மாதங்களாக ஏராளமான விஷயங்கள் என்னைப் பற்றி கூறப்பட்டு வந்தன. என்னை பற்றி எதுவும் தெரியாதவர்கள்கூட அதிகமாக பேசினார்கள். அதற்கான பதிலடியைக் கொடுத்துள்ளேன் என இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்று அறிவித்துள்ளார். ...
-
ரோஹித், விராட் ஓய்வு அறிவிப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் சாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ...
-
எங்களுடைய கனவு சிதைந்துவிட்டது - தோல்வி குறித்து மார்க்ரம் வருத்தம்!
இத்தொடரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஆனால் தற்போதைய தோல்வியானது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
கோப்பையை வென்றதுடன் வரலாற்று சாதனையையும் நிகழ்த்திய இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் தோல்வியையே சந்திக்காமல் கோப்பையை வென்ற முதல் அணி எனும் வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது. ...
-
ஆட்டத்தின் முடிவை மாற்றிய சூர்யகுமாரின் கேட்ச்; சிறந்த ஃபீல்டருக்கான விருது வழங்கி கவுரவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டத்தின் முடிவை மாற்றிய சூர்யகுமார் யாதவிற்கு சிறந்த ஃபீல்டருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக்கோப்பை தொடரை வென்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளர். ...
-
விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசுக்காக நன்றி - இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய தோனி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். ...
-
கோலியைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
கோப்பையை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
T20 WC 2024, Final: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. ...
-
T20 WC 2024, Final: 95 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட விராட் கோலி - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அடித்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட ஜஸ்பிரித் பும்ரா - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024, Final: விராட், அக்ஸர் அசத்தல்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24