Fa cup
மகளிர் ஆசிய கோப்பை 2024: மலேசியாவை வீழ்த்தி தாய்லாந்து அசத்தல் வெற்றி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள மலேசியா மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய நன்ஃபட் சௌஹான் ரன்கள் எதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான பூச்சாதமும் 18 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய கோஞ்சரோன்கை ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் திபட்சா புத்தாவோங் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஞ்சரோன்கை 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மாயா 29 ரன்களை சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சோற்ப ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் 20 ஓவர்கள் முடிவிக் தாய்லாந்து அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது. மலேசியா அணி தரப்பில் இஸ்மைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Fa cup
-
எங்களை குறை சொல்லும் முன் உங்கள் வரலாற்றை திரும்பி பாருங்கள் - இன்ஸாமாம் கருத்துக்கு முகமது ஷமி பதிலடி!
பந்தை சேதப்படுத்தியதில் தங்கள் வீரர்கள் சிக்கிய முந்தைய சம்பவங்களை அவர்கள் நினைவில் வைத்து பேச வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக்கிற்கு முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானை 108 ரன்களில் சுருட்டியது இந்தியா!
Women’s T20 Asia Cup 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: யுஏஇ-யை வீழ்த்தி நேபாள் அணி வரலாற்று வெற்றி!
Womens Asia Cup T20 2024: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேபாள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அனிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இணையத்தில் வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
2023 உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறிய போது எடுத்த புகைப்படத்தையும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினையும் இணைந்து ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அடுத்த உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பிடிக்க மாட்டார் - அமித் மிஸ்ரா!
2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறிய கருத்துக்கு ரசிகர்கள் தங்கள் பதிலடியை கொடுத்து வருகின்றனர். ...
-
ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது - ஷிவம் தூபே!
ஐபிஎல் தொடரின் போட்டி சூழல் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது. மேலும் அது இன்று சர்வதேச அரங்கில் நாம் காணும் வெற்றிக்கு பங்களிக்கிறது என இந்திய வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை சென்றடைந்தது இந்திய மகளிர் அணி!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று இலங்கை சென்றடைந்துள்ளது. ...
-
வதேதராவில் ஹர்திக் பாண்டியாவிற்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு அவரது சொந்த ஊரானா வதேதராவில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். ...
-
இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் வநிந்து ஹசரங்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக வநிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை; யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்?
உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் வழங்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகையில், யார் யாருக்கு எவ்வளவு பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24