From virat kohli
ஐபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய விராட் கோலி; ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு!
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். முதலில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பின்னர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் இப்போட்டியில் 100 ரன்களைத் தாண்டியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Related Cricket News on From virat kohli
-
16 வருடமாக ஆர்சிபியின் கதை இதுதான் - அம்பத்தி ராயுடு விமர்சனம்!
பிரபல வீரர்கள் அனைவரும் கேக்கில் உள்ள க்ரீமை மட்டும் சாப்பிட்டுவிட்டு செல்வது போல் ஆட்டமிழந்து வெளியேறுகிறார்கள். அதனால்தான் ஆர்சிபி இன்று வரை ஐபிஎல் தொடரை வெல்லவில்லை என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விமர்சித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மீண்டும் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ்; ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த ஷிகர் தவான்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் சேஸிங்கின் போது அதிகமுறை 50+ ஸ்கோரை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன்செய்து ஷிகர் தவான் அசத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஏப்ரல் இறுதியில் இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்பு?
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியானது வரும் ஏப்ரல் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
விராட் கோலிக்கு சக வீரர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை - சுனில் கவாஸ்கர்!
இந்த போட்டியில் சக பேட்ஸ்மேன்கள் கை கொடுத்திருந்தால் விராட் கோலியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ரிங்கு சிங்கிற்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
ஆர்சிபி - கேகேஆர் அணி போட்டி முடிவுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இளம் வீரர் ரிங்கு சிங்கிற்கு பேட் ஒன்றினை பரிசளித்த காணொளி வைரலாகி வ்ருகிறது. ...
-
கிறிஸ் கெயில், எம் எஸ் தோனி சாதனையை உடைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இன்றைய போட்டியில் நாங்கள் நினைத்தது போன்று எதுவும் நடக்கவில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக இந்த தோல்வியைச் சந்தித்துள்ளோம் என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை கட்டியணைந்த கௌதம் கம்பீர்; வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர், ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலியை கட்டியணைத்து நலம் விசாரித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: விராட் கோலி அதிரடியில் தப்பிய ஆர்சிபி; கேகேஆர் அணிக்கு 183 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தினேஷ் கார்த்திக், விராட் கோலியை பாராட்டிய ஃபாஃப் டூ பிளெசிஸ்!
தினேஷ் கார்த்திக் இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத் தருவார் என்று தோன்றுகிறது. அவர் இந்த சீசனுக்கு தயாராகி விட்டார் என்று நினைப்பதாக ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - ஷிகர் தவான்!
நாங்கள் பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்ததும், விராட் கோலி கொடுத்த கேட்சை தவறவிட்டதும் போட்டியின் முடிவை மாற்றிவிட்டது என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: விரட் கோலி, தினேஷ் கார்த்திக் அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24