Icc
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னிலைப் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது இன்னிங்ஸ் மற்றும் 273 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 575 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அதன்பின் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்களை மட்டுமே எடுத்த ஃபாலோ ஆன் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரையும் வென்றுள்ளது.
Related Cricket News on Icc
-
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த காகிசோ ரபாடா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளி தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தோல்வியடைந்தும் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!
இந்தியா - நியூசிலாந்து, பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. ...
-
நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பந்த்!
ஐசிசி ஆடவர் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
மகளிர் டி20 தரவரிசை: நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் முன்னேற்றம்!
மகளிருக்கான புதுபிக்கப்பட்ட டி20 தரவரிசைப் பட்டியலில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ரோஹித் செய்த அந்த ஒரு செயல் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் - சஞ்சு சாம்சன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பிடிக்காதது குறித்தும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சஞ்சு சாம்சன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஐசிசி தேர்வு செய்த அணியில் ஹர்மன்பிரீத் கவுருக்கு இடம்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை உள்டக்கி உருவாக்கப்பட்ட கனவு அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் சூஸி பேட்ஸ்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் படைத்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்த அமெலியா கெர்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் அமெலியா கெர் படைத்துள்ளார். ...
-
இன்று எங்களின் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை - லாரா வோல்வார்ட்!
நாங்கள் பவர்பிளேவில் நல்ல தொடக்கத்தை பெற்றிருந்த நிலையில், இந்த இலக்கானது எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்கள் திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவிற்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் அப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியாவிற்கு புதிய யோசனை வழங்கிய பிசிபி!
இந்திய அணி போட்டி நாள்களில் பாகிஸ்தானில் விளையாடிவிட்டு மீண்டும் அதே நாளில் தாயகம் திரும்பலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசனைஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து, இறுதிப்போட்டி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24