If kohli
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ஆர்சிபி-யை 172 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடி வந்த டூ பிளெசிஸ் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோவ்மன் பாவெலின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வந்த விராட் கோலியும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on If kohli
-
விராட் கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்; பயிற்சியை ரத்து செய்த ஆர்சிபி - தகவல்!
விராட் கோலிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணியின் பயிற்சி போட்டிகள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவற்ற ஆர்சிபி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ...
-
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவார் - ரிக்கி பாண்டிங் நம்பிக்கை!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறக்குவார்கள் என உறுதியாக நம்புகிறேன் என்று முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது சொந்த சாதனையை முறியடிப்பார் - மேத்யூ ஹைடன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் தனது சொந்த சாதனையை விராட் கோலி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
மழைக்கு பின் ஆடுகளம் ராஞ்சி மைதானத்தின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இப்போட்டியில் நாங்கள் எதிரணியை 175 ரன்களில் சுருட்ட வேண்டும் என்று எண்ணினோம். அதனை ஒரு கட்டத்தில் எங்களால் செய்ய முடியும் என்றே தோன்றியது என்று ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: வான வேடிக்கை காட்டிய ஆர்சிபி பேட்டர்ஸ்; சிஎஸ்கே அணிக்கு 219 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மைதானத்தின் மேற்கூரைக்கு சிக்ஸரை பறக்கவிட்ட விராட் கோலி - வைரல் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் விராட் கோலி அடித்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரோஹித் சர்மாவின் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன் - இம்பேக்ட் வீரர் விதி குறித்து விராட் கோலி!
இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக ஆல் ரவுண்டர்கள் பொதுமான அளவு பந்துவீசுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன என விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை இது நடக்காது - ரைலீ ரூஸோவ்!
அனைத்து டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோர் குவிக்க வேண்டும் எனில் அதற்கு நீங்கள் விராட் கோலியாக இருக்க வேண்டும் என்று ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு விளையாட்டு வீரராக அனைவரும் ஒருநாள் முடிவெடுக்க வேண்டி வரும் - ஓய்வு குறித்து விராட் கோலி!
ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் ஒருநாள் முடிவு என்ற ஒன்று இருக்கும் என்று நினைக்கிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வை அறிவித்த சுனில் சேத்ரி; வாழ்த்து கூறிய விராட் கோலி!
சர்சதேச கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு ஒரு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும் - மிஸ்பா உல் ஹக் பாராட்டு!
முக்கிய தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் படைத்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் சமன்செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24