In kolkata
கேகேஆர் அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய ஷாருக் கான் - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்தது. இதில் அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் 30 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்திருந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் 56 பந்துகளை சந்தித்த நரைன் 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 109 ரன்களைச் சேர்த்தார்.
Related Cricket News on In kolkata
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது ஏன்? காணரத்தை கூறிய ஜேசன் ராய்!
கேகேஆர் அணிக்காக விளையாடிவரும் அதிரடி வீரர் ஜேசன் ராய், ஏன் இந்தாண்டு ஐபிஎல்தொடரிலிருந்து விலகினேன் என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். ...
-
காயத்திலிருந்து மீண்ட நிதீஷ் ரானா; கேகேஆர் ரசிகர்கள் மகிழ்ச்சி!
காயம் காரணமாக முதல் சில போட்டிகளை தவறவிட்ட கொல்கத்தா நைட் ரைடர்ச் அணியின் துணைக்கேப்டன் நிதீஷ் ரானா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ...
-
ஹர்சித் ரானா மீது நான் முழு நம்பிக்கை வைத்தேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆண்ட்ரே ரஸல் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் எங்கள் அணிக்கு மிக முக்கியமானவர்கள் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: நடத்தை விதிகளை மீறியதாக ஹர்ஷித் ரானாவுக்கு அபராதம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா நடத்தை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தன்னை காண வந்த ரசிகருக்கு பரிசளித்த ரஹ்மனுல்லா குர்பாஸ்; வைரலாகும் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தன்னை காண வந்த ரசிகர்களுக்கு தனது கையுறைகளை பரிசளித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களை அடிப்பேன் - நிதிஷ் ரானா!
நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அடிப்பேன் என்றும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதே லட்சியம் என்றும் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
-
ஸ்டார்க் பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ரிங்கு சிங்; வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ரிங்கு சிங் சிக்சர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராகணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: கேகேஆர் பயிற்சி முகாமில் இணைந்த மிட்செல் ஸ்டார்க்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கேகேஆர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஓர் பார்வை!
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர்; ஐபிஎல் தொடரிலிருந்து விலகலா?
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் தனது முதுகு பகுதியில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்; அதிரடி வீரரை தட்டித்தூக்கிய கேகேஆர்!
வரவுள்ள ஐபிஎல் 17ஆவது சீசனிலிருந்து விலகிய கேகேஆர் அணியின் ஜேசன் ராய்க்கு பதிலாக அதிரடி வீரர் பிலிப் சால்ட்டை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
அரசியலில் இருந்து விலகும் கவுதம் கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம் பி யுமான கவுதம் கம்பீர் தன்னை அரசியலின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கும்படி பாஜகவிடம் கோரிக்கை வைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்தா சமீராவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷமந்தா சமீராவை ஒப்பந்த செய்துள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24