Advertisement
Advertisement
Advertisement

In kolkata

IPL 2023: Kolkata Knight Riders unveil new jersey
Image Source: Google
Advertisement

ஐபிஎல் 2023: புதிய ஜெர்சியை வெளியிட்டது கேகேஆர்!

By Bharathi Kannan March 26, 2023 • 14:13 PM View: 313

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

வரும் 31ஆம் தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த தொடருக்காக அனைத்து வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

Advertisement

Related Cricket News on In kolkata