In pandya
நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே ஆகியோரின் அரைசதத்தின் மூலமும், இறுதி நேரத்தில் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி அபாரமான ஃபினிஷிங் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா சதமடித்ததைத் தவிற மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூல சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரனா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on In pandya
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்த தோனி - வைரல் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஜஸ்ப்ரித் பும்ரா அணியின் இருப்பது எனது பாக்கியம் - ஹர்திக் பாண்டியா!
பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் தங்கள் அணியில் இருக்க வேண்டும் என அனைத்து கேப்டன்களும் விரும்புவார்கள் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
பாண்டியாவை ஏமாற்றிய உடன்பிறவா சகோதரர்; காவல் நிலையத்தில் புகார்!
இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியாவிடம் இருந்து ரூ.4.25 கோடி மோசடி செய்ததாக அவரது உடன்பிறவா சகோதரர் வைபவ் பாண்டியாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ...
-
சித்தி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா!
மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ஆர்சிபி அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சித்தி விநாயகர் கோயிலியில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
-
மயங்க் யாதவின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த குர்னால் பாண்டியா!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய மயங்க் யாதவ் குறித்த அப்டேட்டை சக அணி வீரர் குர்னால் பாண்டியா வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது லக்னோ!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஷெஃபெர்ட்டின் அதிரடியான ஆட்டம் தான் வெற்றிக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. இப்போட்டியின் முதல் 6 ஓவர்களிலேயே 70 ரன்களுக்கும் அதிகமான ரன்களைச் சேர்த்தோம் என்று மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 வெற்றிகளை குவித்த முதல் அணி எனும் சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராட்டம் வீண்; முதல் வெற்றியை ருசித்தது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: டிம் டேவிட், செஃபெர்ட் அபார ஆட்டம்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 235 இலக்கு!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 235 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்; அணியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மற்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியால் அதிருப்தியடைந்துள்ள முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அடுத்த ஐபிஎல் சீசனில் அந்த அணியை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
என்னுடைய விக்கெட் ஆட்டத்தை மாற்றிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
என்னுடைய விக்கெட் அவர்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டது. நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சி எடுத்து விளையாடியிருக்க வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: போல்ட், சஹால் அசத்தல் பந்துவீச்சு; 125 ரன்களில் சுருண்டது மும்பை இந்தியன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 126 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
இறுதிக்கட்டத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டதால் கொஞ்சம் தடுமாறினோம் என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47