Indian cricket team
தொடர் தோல்வி எதிரொலி; வீரர்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்த பிசிசிஐ!
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது கடுமையான நிலைப்பாட்டைக் காட்டியுள்ளது மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, குடும்பப் பயணம், வீரர்களின் உடமை வரம்பு மற்றும் தனிப்பட்ட விளம்பரப் படப்பிடிப்புகள் தொடர்பான கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜனவரி மாதம் தொடர் முடிந்த பிறகு பிசிசிஐ நடத்திய மறுஆய்வுக் கூட்டத்தின் போது, டிரஸ்ஸிங் ரூமுக்குள் நல்லிணக்கம் மற்றும் ஒழுக்கம் இல்லாதது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கிட்டத்தட்ட இரண்டு மாத கால ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, முழு அணியும் ஒரே ஒரு அணி விருந்துக்கு மட்டுமே கூடியது என்பதும் தெரியவந்தது.
Related Cricket News on Indian cricket team
-
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அவதிப்படும் சர்ஃப்ராஸ் கான்!
இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்டர் சர்ஃப்ராஸ் கான் தனது காயம் காரணமாக ரஞ்ச் கோப்பை தொடரின் சில போட்டிகளை தவறவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CT2025: பாகிஸ்தானில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய அணி கேப்டன் - தகவல்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தொடக்க நிகழ்சி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
சவுராஷ்டிரா அணிக்கு எதிரான டெல்லி அணியின் அடுத்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பந்த் விளையாட உள்ளதாக டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரொஹன் ஜெட்லி தெரிவித்துள்ளார். ...
-
நான் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
நான் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். ஆனால் அணியில் எனக்கு இடம் எங்கே?நிச்சயமாக இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் இல்லை என தனது ஓய்வு குறித்து அஸ்வின் மனம் திறந்துள்ளார் ...
-
CT2025: சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடமில்லை; காரணம் என்ன?
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரில் வரலாற்று சாதனை படைக்கவுள்ள அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரின் மூலம் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக சில சிறப்பு சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் ...
-
ரஞ்சி கோப்பை அணியில் இணைந்த விராட் கோலி, ரிஷப் பந்த், ஷுப்மன் கில்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் டெல்லி ரஞ்சி அணியிலும், ஷுப்மன் கில் பஞ்சாப் ரஞ்சி அணியில் இணைந்துள்ளனர். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வுசெய்த கவாஸ்கர், இர்ஃபான் பதான்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் தேர்வுசெய்துள்ளனர். ...
-
மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா; காரணம் என்ன?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். ...
-
இத்தோல்வியில் இருந்து வலுவாக மீண்டு வருவோம் - நிதீஷ் ரெட்டி!
இத்தொடரை நாங்கள் முடிக்க விரும்பிய விதம் இதுவல்ல. நாங்கள் இத்தோல்வியில் இருந்து உறுதியாகவும், வலுவாகவும் மீண்டு வருவோம் என இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சிறப்பு சாதனைகளை படைக்க வாய்ப்பினைப் பெற்றுள்ளார். ...
-
அடுத்தடுத்து சதங்களை விளாசிய கருண் நாயர்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அடுத்தடுத்து சதங்களை விளாசி மிரட்டி வரும் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயருக்கு எதிர்வரும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடமளிக்கவில்லை. ...
-
மார்ச் 23-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர் - பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் இறுதிப்போட்டி மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24