Advertisement
Advertisement

Kkr

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
Image Source: Google

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!

By Bharathi Kannan May 05, 2024 • 17:38 PM View: 87

 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது தற்சமயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று இரவு நடைபெறும் 54ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளும் இந்த சீசனில் மோதிய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதனால் அத்தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Related Cricket News on Kkr