Major league cricket
MLC 2024: யூனிகார்ன்ஸை பந்தாடி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மொரிஸ்வில்லேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 10 ரன்களிலும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டிய மேத்யூ ஷார்ட் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய கிருஷ்ணமூர்த்தி 17, ஜோஷ் இங்கிலிஸ், கோரி ஆண்டர்சன், ஹசன் கான் 19, ஹாரிஸ் ராவுஃப் 13 ரன்களில் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 17.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது மொஹ்சின் 4 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ, ஸியா உல் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Major league cricket
-
MLC 2024: சதமடித்து அசத்திய ரிக்கெல்டன்; நைட் ரைடர்ஸை வீழ்த்தியது ஓர்காஸ்!
Major League Cricket 2024: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சியாட்டில் ஓர்காஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
MLC 2024: மழையால் வீணான ஃபாஃப் டூ பிளெசிஸ் சதம்!
Major League Cricket 2024: தொடர் மழை காரணமாக டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் -வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டியானது முடிவு எட்டப்படாமல் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
-
MLC 2024: ஃபின் ஆலன், மேத்யூ ஷார்ட் அரைசதம்; நைட் ரைடர்ஸை வீழ்த்தி யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
Major League Cricket 2024: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
MLC 2024: ஸ்டீவ் ஸ்மித், நேத்ரவால்கர் அபாரம்; நியூயார்க்கை வீழ்த்தி வாஷிங்டன் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ...
-
MLC 2024: அரைசதம் அடித்து மிரட்டிய உன்முக்த் சந்த்; வைரலாகும் காணொளி!
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி வீரர் உன்முக்த் சந்த் அரைசதம் அடித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
MLC 2024: உன்முக்த் சந்த், அலி கான் அபாராம்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
Major League Cricket 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
MLC 2024: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அசத்தல் வெற்றி!
Major League Cricket 2024: சியாட்டில் ஆஸ்கர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
வாணவேடிக்கை காட்டிய நிக்கோலஸ் பூரன்; வைரல் காணொளி!
சியாட்டில் ஆர்காஸ் அணிக்கெதிரான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதியிப்போட்டியில் நிக்கோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் எம்ஐ நியூயார்க் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
எம்எல்சி 2023: பூரன் அபார சதம்; சியாட்டிலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூயார்க்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி இறுதிப்போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
பிராவோவை கலாய்த்த பொல்லார்ட் - வைரலாகும் காணொளி!
டெக்ஸாஸ் அணிக்கெதிரான போட்டியில் நியூயார்க் அணி வெற்றிபெற்றதையடுத்து, எம்ஐ அணியின் கீரன் பொல்லார்ட், டெக்ஸாஸ் அணியின் டுவைன் பிராவோவை கலாய்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2023 குவாலிஃபையர் 2: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸிற்கு எதிரான எம்எல்சி குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
எம்எல்சி 2023 குவாலிஃபையர் 1: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்காஸ்!
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எம்எல்சி குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
எம்எல்சி 2023 எலிமினேட்டர்: வாஷிங்டனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நியூயார்க்!
வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கெதிரான எம்எல்சி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஷித் கான் ஓவரை பிரித்து மேய்ந்த கிளாசன் - வைரல் காணொளி!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ரஷித் கானின் ஒரே ஓவரில் ஹென்ரிச் கிளாசென் 24 ரன்களை குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47