Of rajasthan
ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸில் தொடரும் சஞ்சு சாம்சன்?
Sanju Samson: எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு செல்வார் என்று கூறப்பட்ட நிலையில், தற்சமயம் ராஜஸ்தான் அணி அவரை தக்கவைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
Related Cricket News on Of rajasthan
-
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான வீரர் சூர்யவன்ஷி - அபினவ் முகுந்த்!
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான வீரர்களில் வைபவ் சூர்யவன்ஷியும் ஒருவர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் இந்த சீசனில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் - சஞ்சு சாம்சன்!
நாங்கள் சில தவறுகளைச் செய்துள்ளோம். அடுத்த சீசனில் நாம் சிறந்த மனநிலையுடன் திரும்பி வர வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
இலக்கு எங்களுக்கு எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்தது - சஞ்சு சாம்சன்!
பவர்பிளேயில் நாங்கள் பெற்ற வேகத்தை எங்களால் தொடர முடியாததே பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பயிற்சியில் கவனத்தை ஈர்த்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒப்பந்தமாகிவுள்ள லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சந்தீப் சர்மாவுக்கான மாற்று வீரராக நந்த்ரே பர்கர் தேர்வு; ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சந்தீப் சர்மாவுக்கு பதிலாக நந்த்ரே பார்கரை ராஜஸ்தான் ரயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: லுவான் ட்ரே பிரிட்டோரியஸை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிதிஷ் ரானாவுக்கு பதிலாக லுஹான் ட்ரே பிரிட்டோரியஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
நாங்கள் சில விஷயங்களை சிறப்பாகச் செய்திருக்கலாம் - ரியான் பராக்!
இந்த சீசனில் நாங்கள் நிறைய விஷயங்களைச் சரியாகச் செய்துள்ளோம், அதேசமயம் நிறைய தவறுகளையும் செய்துள்ளோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகினார் சந்தீப் சர்மா?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் - ராகுல் டிராவிட்!
டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
6,4,6,4,4,6: ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையைப் படைத்த கரீம் ஜானத்!
குஜராத் அணி வீரர் கரீம் ஜானத் ஓவரில் ரஜாஸ்தன் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அடுத்தாடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ருத்ரதாண்டவமாடிய சூர்யவன்ஷி; டைட்டன்ஸை பந்தாடியது ராயல்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
முதல் 10 ஓவர்கள் ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது - ரியான் பராக்!
பேட்டிங்கின் போதும் நாங்கள் முதல் 10 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெறும் அணியாக இருந்தோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஜோஷ் ஹேசில்வுட் அபாரம்; பெங்களூருவில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47