On india
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; ஏசிசி அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நிறைவு பெற்று சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் முதலாவதாக நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்த பாகிஸ்தான் அடுத்ததாக செப்டம்பர் 10ஆம் தேதி பரம எதிரி இந்தியாவை மீண்டும் எதிர்கொள்கிறது. முன்னதாக இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்ததை போலவே பாகிஸ்தானின் பந்து வீச்சில் ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 66/4 என சரிந்த இந்தியா 150 ரன்களாவது தாண்டுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்ட போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய இஷான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 266 ரன்கள் குவிக்க உதவினார்கள். இருப்பினும் அதை பாகிஸ்தான் சேசிங் செய்ய துவங்கிய போது வந்த மழை போட்டியை மொத்தமாக நிறுத்தியது. எனவே அந்த போட்டியில் சந்தித்த பின்னடைவுக்கு இம்முறை பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
Related Cricket News on On india
- 
                                            
பாகிஸ்தான் அணி தான் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ளது - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் அட்டாக்கை பாகிஸ்தான் அணி கொண்டுள்ளதால், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் திறமை இந்திய வீரர்களிடம் உள்ளது - ராபின் உத்தப்பா!
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் கையாளக்கூடிய திறமையான பேட்ஸ்மேன்கள், இந்திய அணியில் இருக்கிறார்கள் என்று நானும் நம்புகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
இந்தியாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த பாபர் ஆசாம்!
இந்தியாவுடனான போட்டியில் தங்களுடைய 100 செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிச்சயம் தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் மறைமுகமான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ...
 - 
                                            
சவாலளித்த நேபாள் வீரர்களுக்கு பரிசளித்த இந்த வீரர்கள் - வைரல் காணொளி!
இந்தியா - நேபாள் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நேபாள் அணி வீரர்களுக்கு இந்திய அணி வீரர்கள் பரிசளித்தனர். ...
 - 
                                            
பாகிஸ்தானுடனான போட்டியில் ஆட்டமிழந்தது வருத்தமளித்தது - ஷுப்மன் கில்!
ரோகித் பந்துவீச்சாளர்களை காற்றில் அடிக்க விரும்பக்கூடிய ஒரு வீரர். நான் தரையோடு பவுண்டரி அடிக்க விரும்பும் ஒரு வீரர் என்று இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
இது போன்ற கடினமான மைதானங்களில் விளையாடுவது மிகவும் சவாலாக இருந்தது - ரோஹித் பௌடல்!
தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், மிடில் ஆர்டர் வீரர்கள் ரன்களை சேர்க்க வேண்டியது அவசியம் என நேபாள் அணியின் கேப்டன் ரோஹித் பௌடல் கூறியுள்ளார். ...
 - 
                                            
இந்தப் போட்டியில் எங்கள் பந்துவீச்சு ஓகே, ஆனால் ஃபீல்டிங் மிக மோசம் - ரோஹித் சர்மா!
நாங்கள் இங்கு வந்த பொழுதே எங்களுடைய 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணி எப்படி இருக்கும் என்று தெரியும். ஒன்று இரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம் அவ்வளவுதான் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
IND vs NEP, Asia Cup 2023: ரோஹித், ஷுப்மன் அதிரடி; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!
நேபாளம் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
 - 
                                            
வைரலான சர்ச்சை காணொளி; விளக்கமளித்த கம்பீர்!
தோனி மற்றும் விராட் கோலி பெயர்களை சொல்லி கோஷம் எழுப்பிய ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய விவகாரம் தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். ...
 - 
                                            
ஸ்ரேயாஸ் ஐயரை வர்ணனையில் கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி!
ஒரு விக்கெட் கீப்பரின் பார்வையில் இருந்து இதை மன்னிக்கவே முடியாது. இது நேரடியாக கைக்கு வந்த கேட்ச் என ஸ்ரேயாஸ் ஐயரை வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
IND vs NEP, Asia Cup 2023: புதிய சாதனை படைத்த விராட் கோலி; ரசிகர்கள் விமர்சனம்!
பல அணிகள் விளையாடும் தொடர்களில் தனது 100ஆவது கேட்சை பிடித்துள்ள விராட் கோலி, முகமது அசாரூதினுக்கு பின் இச்சாதனையை செய்யும் இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். ...
 - 
                                            
IND vs NEP, Asia Cup 2023: பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நேபாள் பேட்டர்ஸ்; இந்தியாவுக்கு 231 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
 - 
                                            
இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்?
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
 - 
                                            
இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான் - ஷாஹீன் அஃப்ரிடி!
விராட் கோலி சிறந்த வீரர். மேலும் அவர் இந்தியாவின் முதுகெலும்பு என்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
 
Cricket Special Today
- 
                    
- 12 Jun 2025 01:27
 
 - 
                    
- 18 Mar 2024 07:47