Sai sudharsan
SA vs IND, 2nd ODI: சாய் சுதர்ஷன், கேஎல் ராகுல் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தும் வரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் - ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய திலக்வர்மாவும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சாய் சுதர்ஷனுடன் இணைந்த கேப்டன் கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Related Cricket News on Sai sudharsan
-
அடுத்த 15 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்ஷன் - இர்ஃபான் பதான்!
வேகத்துக்கு சாதகமாக பேட்டிங்க்கு சவாலாக இருக்கக்கூடிய தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்திய சாய் சுதர்சன் அடுத்த 10 – 15 வருடங்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை காண்பித்ததாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார். ...
-
முதல் முறையாக விளையாடி வெற்றியில் பங்காற்றியது அபாரமானதாகும் - சாய் சுதர்ஷன்!
ஒவ்வொரு குழந்தைகளும் நாட்டுக்காக விளையாடி அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கனவுடனேயே கிரிக்கெட்டில் விளையாட தொடங்குவார்கள் என தனது அறிமுக போட்டியில் அரைசதமடித்த சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். ...
-
முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது - ஐடன் மார்க்ரம்!
ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது. சர்வில் இருந்து எங்களால் மீள முடியாத அளவுக்கு பண்ணி விட்டார்கள் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். ...
-
ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற கேஎல் ரகுல் உத்வேகமளித்தார் - அர்ஷ்தீப் சிங்!
இப்போட்டியில் தம்மால் 5 விக்கெட்டுகளை எடுத்து கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கேப்டன் கேஎல் ராகுல் கொடுத்ததாக அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார். ...
-
நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு - கேஎல் ராகுல்!
இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களை ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் போட்டியின் ஆரம்பத்திலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 1st ODI: அறிமுக போட்டியில் அசத்திய சாய் சுதர்ஷன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திய அணியின் அடுத்த தரமான தமிழக வீரராக சாய் சுதர்ஷன் இருப்பார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் டாப் 4இல் இடது கை வீரர்களுக்கு பஞ்சம் இருப்பதால் சாய் சுதர்ஷனுக்கு விளையாடும் 11 பேர் அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
அவரது காணொளி எனக்கு நிச்சயம் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது - சாய் சுதர்ஷன்!
நான் யாரைப் பார்த்து வளர்ந்தேனோ அவர் என் பெயரை சொல்லி கூப்பிட்டதும், அவருடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ள முடிந்ததும் எனக்கு மிகப்பெரிய விஷயம் என விராட் கோலி குறித்து சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன்!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணிக்காக தமிழக வீரர் சாய் சுதர்சன் 73 ரன்கள் சேர்த்து அசத்தி இருக்கிறார். ...
-
இங்கிலாந்து கவுண்டி அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்தின் பிரபல கவுண்டி அணிகளில் ஒன்றான சர்ரே அணி, தமிழக வீரர் சாய் சுதர்சனை தங்கள் அணியில் இணைத்துக்கொண்டுள்ளது. ...
-
நாங்கள் யாரும் சிறுவர்களை அனுப்ப சொல்லி கேட்கவில்லை - முகமது ஹாரிஸ்!
எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நாங்கள் ஒன்றும் இந்தியாவை சிறு குழந்தைகளை கொண்ட அணியை அனுப்பி வைக்குமாறு கேட்க கிடையாது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார். ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: சாய் சுதர்ஷன் சதத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
பாகிஸ்தான் ஏ அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் நேபாள் ஏ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை 175 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய ஏ அணிக்கெதிரான எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47