Advertisement
Advertisement
Advertisement

South

SA vs IND: ஒருநாள், டி20 & டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; முக்கிய மாற்றங்கள்!
Image Source: Google
Advertisement

SA vs IND: ஒருநாள், டி20 & டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; முக்கிய மாற்றங்கள்!

By Bharathi Kannan December 04, 2023 • 13:34 PM View: 272

இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து  இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர்களில் இருவரும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related Cricket News on South