Advertisement
Advertisement

Sri lanka tour bangladesh 2024

BAN vs SL: வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய்!
Image Source: Google

BAN vs SL: வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய்!

By Bharathi Kannan March 21, 2024 • 16:06 PM View: 90

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான நஹித் ராணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியிலிருந்து அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் காயம் காரணமாக விலகியுள்ளார்.

Related Cricket News on Sri lanka tour bangladesh 2024