St david
இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை - டெம்பா பவுமா!
ஆஸ்திரேலியா அணி இன்று உலகக்கோப்பை அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வது என தவறான முடிவை எடுத்தது. ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் இருவரும் ஜோடி சேர்ந்து தொடர்ச்சியாக 14 ஓவர்கள் வீசி, தென் ஆப்பிரிக்காவின் முதல் நான்கு விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு பறித்தார்கள்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 48 வது ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தற்பொழுது ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டியில் தொடரை நடத்தும் இந்திய அணிக்கு எதிராக குஜராத் அஹ்மதாபாத் மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி விளையாட இருக்கிறது.
Related Cricket News on St david
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 8ஆவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
ஜெர்சியை மாற்றிக்கொண்ட ரோஹித் சர்மா - டேவிட் பெக்காம்!
இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் ஜெர்சியை பரிசளித்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மில்லர் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 213 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐசிசி உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பேட்டர்களை திக்குமுக்காட வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தி காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்தின் சிக்சர் சாதனையை தகர்த்தது தென் ஆப்பிரிக்கா!
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற இங்கிலாந்தின் மாபெரும் சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், டுசென் சதம்; மில்லர் அசத்தல் பினிஷிங் - நியூசிக்கு 358 டார்கெட்!
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 358 ரன்களை இலக்காக நிர்னயித்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வில்லி!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி அறிவித்துள்ளார். ...
-
நான் என்னால் முடிந்தவரை நன்றாக விளையாடுவேன் - டேவிட் வார்னர்!
நான் களத்திற்குள் சென்று என்னால் முடிந்ததை செய்யும் பொழுது, எனக்கு பின்னால் ஹெட் மற்றும் மார்ஷ் இருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. நான் உருவாக்கும் அழுத்தத்தை அவர்கள் எதிர் அணியின் மீது அப்படியே தொடர்கிறார்கள் என டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியாவை 229 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மிகச் சிறப்பான முறையில் மீண்டு வந்திருக்கிறேன் - டிராவிஸ் ஹெட்!
நான் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பதில் மகிழ்ச்சி. அதே வேளையில் அணிக்கு திரும்பியதோடு எனது பங்களிப்பை வழங்கி அதில் நாங்கள் வெற்றியும் பெற்றதில் எனக்கு கூடுதல் சந்தோஷம் என ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த போட்டியிலும் இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை தொடர்வோம் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் பீல்டிங்கில் சரியாக செயல்பட்டதாலயே எங்களால் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்து வெற்றி பெற முடிந்ததாக கருதுகிறேன் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வார்னர், ஹெட் மிரட்டல்; நியூசிலாந்துக்கு 389 டர்கெட்!
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 389 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பந்துவீச்சாளர்களை புரட்டியெடுத்த வார்னர், ஹெட்; ஆஸ்திரேலியா புதிய சாதனை!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் 118 ரன்களை குவித்து சாதனைப்படைத்துள்ளது. ...
-
IND vs AUS: இந்திய டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மேத்யூ வேட் கேப்டன்!
இந்திய அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அனுபவ வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47