Tamil cricket
ஆஃப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக ஸ்ரீதர் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான உதவி பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர் ஸ்ரீதரை நியமித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையையும் ஆஃப்கானிஸ்தான கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. முன்னதாக ஸ்ரீதர் கடந்த 2014 முதல் 2021 வரை இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார்.
தற்போது 54 வயதான ஸ்ரீதர், இடது கை சுழற்பந்து வீச்சாளர், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன்பின் கடந்த 2001 ஆம் ஆண்டு பயிற்சியாளர் பணியை தொடங்கிய அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணியாற்றினார். பிறகு 2014 உலகக் கோப்பையில் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட அணியிலும், ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் பணியாற்றினார்.
Related Cricket News on Tamil cricket
-
PAK vs BAN, 1st Test: அற்புதமான கேட்சை பிடித்து வியப்பில் ஆழ்த்திய ஜாகிர் ஹசன்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் ஜாகீர் ஹசன் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வரைலாகி வருகிறது. ...
-
ENG vs SL, 1st Test: முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை; இங்கிலாந்து நிதானம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியானது 236 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
PAK vs BAN, 1st Test: டக் அவுட்டாகி நடையைக் கட்டிய பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
CWCL 2: மேக்ஸ் ஓடவுட், கைல் கெலின் அபாரம்; அமெரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து!
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
பார்டர்-கவாஸ்கர் கோப்பை மீண்டும் எங்கள் கைகளில் இருக்கும் - மிட்செல் ஸ்டார்க்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை போல பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவும் சமமான சவாலை கொடுப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். ...
-
பொறுப்பை நானே ஏற்க வேண்டும் என்று நினைத்தேன் - தீப்தி சர்மா!
எனது பயிற்சிகள் அனைத்தையும் கடந்து, எனது பேட்டிங் உண்மையில் மேம்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் உணர்கிறேன் என்று இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
-
PAK vs BAN, 1st Test: சைம் அயூப், சௌத் ஷகீல் அரைசதம்; முதல் இன்னிங்ஸில் சமாளிக்கும் பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
தனது ஆல் டைம் சிறந்த உலக லெவனை தேர்வு செய்த கௌதம் கம்பீர்!
சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடன் விளையாடிய வீரர்களைக் கொண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சிறந்த உலக லெவனை அறிவித்துள்ளார். ...
-
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் சாதனையை தகர்க்க காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெறவுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகும் ஜெய் ஷா?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெலியாகியுள்ளன. ...
-
இங்கிலாந்து vs இலங்கை, முதல் டெஸ்ட் - போட்டிக்கு முன் இரு அணி கேப்டன்களும் கூறியது என்ன?
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணி கேப்டன்களும் செய்தியாளர்களைச் சந்தித்து தங்கள் அணி குறித்த கருத்துகளை தெரிவித்துள்ளனர். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடரின் வெற்றியாளரை கணித்த ஆடம் கில்கிறிஸ்ட்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கணித்துள்ளார். ...
-
வீரர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க விரும்புகிறோம் - ஷான் மசூத்!
நாங்கள் வீரர்களை ஆதரிக்க முயற்சிப்போம். அவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் - தினேஷ் கார்த்திக் உறுதி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47