Tamil cricket
சஞ்சு சாம்சனிற்கு சரியான வாய்ப்பை கொடுக்க வேண்டும் - காம்ரன் அக்மல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. டிரினிடாட் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 150 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 6, கில் 3, சூரியகுமார் யாதவ் 21, ஹர்திக் பாண்டியா 19, சஞ்சு சாம்சன் 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய திலக் வர்மா வருமா 39 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் சோதனை என்ற பெயரில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்து வரும் மாற்றங்கள் நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகக்கோப்பைக்கு 100 நாட்கள் கூட இல்லாத நிலையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் 12 வருடங்கள் கழித்து ரோகித் சர்மாவை 7வது இடத்தில் களமிறக்கிய அவருடைய சோதனைகள் 2ஆவது போட்டியில் 5 வருடங்கள் கழித்து தோல்வியை கொடுத்தது. அந்த வரிசையில் இந்த போட்டியில் பொதுவாக 1 முதல் 4 வரையிலான டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய சஞ்சு சாம்சன் சம்பந்தமின்றி 6ஆவது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று அழுத்தமான சூழ்நிலையில் 1 சிக்சருடன் 12 ரன்களில் ரன் அவுட்டானார்.
Related Cricket News on Tamil cricket
-
எல்பிஎல் 2023: மெண்டிஸ் அதிரடி; தம்புலாவை வீழ்த்தியது கொழும்பு!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ரோஹித், கோலி யாருடைய விக்கெட் கடினம்? - கைல் மேயர்ஸ் பதில்!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரது விக்கெட்டில் யாருடைய விக்கெட் மதிப்பு வாய்ந்தது என்ற கேள்விக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைல் மேயர்ஸ் பதிலளித்துள்ளார். ...
-
இந்தியா, தென் ஆப்பிரிக்கா தொடர்களை தவறவிடும் பாட் கம்மின்ஸ்!
ஆஷஸ் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வரவுள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ருத்ரதாண்டவமாடிய ஜோர்டன்; மைதானத்தில் சிக்சர் மழை!
தி ஹெண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் சிக்சர்களாக விளாசி தள்ளிய சதர்ன் பிரேவ் அணியின் கிறிஸ் ஜோர்டன் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுடையை ஊதியத்தை உயர்த்துவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
கவுண்டி கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட்டாகிய பிரித்வி ஷா - வைரல் காணொளி!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் பிரித்வி ஷா, ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்தியாவை வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர் - வக்கார் யூனிஸ்!
2023 உலகக் கோப்பையில் இந்திய அணியை தனியாகவே நின்று வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர் என்று முன்னாள் பாகிஸ்தான் பவுலர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். ...
-
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேன் வில்லியம்சன்!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
ஆர்சிபி அணியை விட்டு வெளியேறுவது ஏமாற்றமாக உள்ளது - மைக் ஹெசன்
கடந்த 4 சீசன்களில் 3 முறைன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். ஆனால் வீரர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்தை போல் கோப்பையை மட்டும் வெல்ல முடியவில்லை என ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். ...
-
எல்பிஎல் 2023: கலே டைட்டைன்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs IND: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் அலெக்ஸ் ஹேல்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார். ...
-
WI vs IND, 1st T20I: இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அறிமுக போட்டியிலேயே அசாத்தலான கேட்ச் பிடித்து அசத்திய திலக் வர்மா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ் கொடுத்த கேட்சை இந்திய அணியின் அறிமுக வீரரான திலக் வர்மா டைவ் அடித்து பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47