Tamil cricket
இது நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி இந்தியா வராது - எஹ்சன் மசாரி!
உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியானது அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் விளையாட்டுப் பொறுப்பாளர் எஹ்சான் மசாரி, இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பதற்கு வலுவான நிபந்தனைகளை விதித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது அமைச்சகத்தின் கீழ் வருகிறது. எனவே இந்தியா தனது ஆசியக் கோப்பை போட்டிகளை நடுநிலையான இடத்தில் விளையாட விரும்பினால், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்கும் இதையே நாங்கள் கோருவோம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
Related Cricket News on Tamil cricket
-
டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர் 2: ஷிவம் சிங் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த திண்டுக்கல்!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான் டிஎன்பிஎல் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரோஹித்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஹர்பஜன் சிங்!
ரோஹித்தை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருப்பது சரி கிடையாது. அவர் ரன்கள் எடுப்பதில்லை, எடையை குறைக்கவில்லை, சிறப்பான கேப்டன் இல்லை இப்படிப் பேசிக் கொண்டே இருப்பதில் பயன் கிடையாது என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியை நியமிக்க வேண்டும் - எம்எஸ்கே பிரசாத்!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். ...
-
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் ட்விட்டர் பதிவு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். ...
-
SLW vs NZW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி தொடக்கம்தான் - பென் ஸ்டோக்ஸ்!
முதல் இரண்டு போட்டியில் தோற்றப் பிறகு 3ஆவது டெஸ்ட் முக்கியமானது. இதனால் நெருக்கடியில் பெற்ற இந்த வெற்றி சிறப்பானது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
குடும்பத்துடன் சென்னை வந்த தோனி; உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்!
சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தயாரித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் சென்னை வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ...
-
இளம் பந்துவீச்சாளர்களை பாராட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
வங்கதேச அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இளம் பந்துவீச்சாளர்களை பாராட்டினார். ...
-
சில வீரர்கள் தனித்துவமாக வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன் - பிரையன் லாரா!
இந்தியா உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய அணி. நாங்கள் முகாமை எங்கிருந்து தொடங்கினோம், தற்பொழுது எங்கு இருக்கிறோம் என்கின்ற வகையில் நாங்கள் சரியாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்திருந்த சாதனையை, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவிடம் அதிகம் எதிர்பார்த்தேன் - சுனில் கவாஸ்கர்!
ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா நிறுத்துவார் என்று எதிர்பார்த்ததாக சுனில் கவாஸ்கர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் ...
-
பந்துவீச்சிலும் நாங்கள் நன்றாக செயல்படவில்லை - பாட் கம்மின்ஸ்!
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சிலும் நாங்கள் நன்றாக செயல்படவில்லை. அதனால் தான் தோல்வியை தழுவினோம் என்று போட்டி முடித்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை தக்கவைத்துள்ளது. ...
-
CWC Qualifiers Final 2023 : நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப்போட்டியில் இலங்கை அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47