Tamil cricket
ரிஷப் பந்த் குறித்து தகவல் வெளியிட்ட பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இன்று காலை உத்தராகண்ட் மாநிலத்தில் காரில் பயணித்தபோது விபத்தில் சிக்கினார். டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்புயில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக அவரை காரில் இருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளது. அதில் “பந்த், சக்ஷாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Related Cricket News on Tamil cricket
-
ஐசிசி விருதுகள் 2022: ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுகள் அறிவிப்பு!
2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி வழங்கும் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. ...
-
PAK vs NZ, 1st Test: கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து; டிராவில் முடிந்த ஏமாற்றமளித்த ஆட்டம்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தது. ...
-
ரிஷப் பந்த் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான் - காவல்துறை!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து குறித்து ரூர்கீ காவல்துறையினர் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் எனக்கூறியிருப்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர். ...
-
AUS vs SA: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கௌதம் கம்பீர் கருத்து!
அடுத்த டி20 உலகக் கோப்பை குறித்தும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணுக வேண்டிய முறை குறித்தும் கௌதம் கம்பீர் அதிரடியான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ...
-
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை - பிசிசிஐ!
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
விராட் கோலி டி20 தொடரில் இல்லாதது ஆதிர்ச்சியாக உள்ளது - சபா கரீம்!
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி இலங்கை டி20 தொடரில் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; மருத்துவமனையில் அனுமதி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த ஒருநாள் வீரர் பட்டியளில் பாபர் ஆசாம், ரஸா!
2022 ஆம் ஆண்டில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது பரிந்துரைப் பட்டியலில் பாபர் ஆசாம், ஆடாம் ஸாம்பா, சிக்கந்தர் ரஸா, ஷாய் ஹோப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
பிபிஎல் 2022: ஜெய் ரிச்சர்ட்சன் அபாரம்; மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரமீஸ் ராஜாவை கண்டித்து சல்மான் பட் சரமாரி கேள்வி!
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை வீசி வரும் ரமீஸ் ராஜாவிற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் அணியில் தொடர்ந்து நீடிக்க இதனை செய்யக்கூடாது - குமார் சங்ககாரா அட்வைஸ்!
இலங்கை அணியுடனான தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள சஞ்சு சாம்சன், தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிடக்கூடாது என முன்னாள் வீரர் குமார் சங்ககாரா கூறியுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பிபிஎல் 2022: காலின் முன்ரோ போராட்டம் வீண்; சிட்னி தண்டரிடம் வீழ்ந்தது பிரிஸ்பேன் ஹீட்!
பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டருக்கு எதிரான போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47