Tamil
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டிக் காக் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ கிளர்க் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜேக் ஃபிரெசர் - மெக்கர்க் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜேக் அரைசதம் கடந்த நிலையில் ஒரு பவுண்டரி, 7 சிக்சர்கள் என 23 பந்துகளில் 55 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Tamil
-
பிபிஎல் 13: விதிகளை மீறிய டாம் கரண்; நான்கு போட்டிகளில் விளையாட தடை!
ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் டாம் கரண் விதிகளை மீறியதாக 4 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...
-
INDW vs AUSW, Only Test: 219 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸி; இந்தியா அதிரடி தொடக்கம்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்த இரு அணிகள் தான் ஐபிஎல் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டன - ஏபிடி வில்லியர்ஸ்!
இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டிராவிட்டை ஜெராக்ஸ் எடுத்த சுமித் டிராவிட்; வைரல் காணொளி!
கூர் பெஹார் கோப்பை தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் சுமித் டிராவிட் 98 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். ...
-
அடுத்த கோப்பையை வெல்லும் அணியை மும்பை உருவாக்கிவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
மும்பை அணிக்குள் சிறந்த சூழலை உருவாக்கினால் அந்த அணி கோப்பையை வெல்லும் போட்டியில் நிச்சயம் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டிய போன்ற வீரரைக் கண்டறிவது கடினம் - ஆஷிஷ் நெஹ்ரா!
ஹர்திக் பாண்டியா போன்ற திறமையும் அனுபவமும் வாய்ந்த வீரரை கண்டறிவது கடினம் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். ...
-
நடப்பு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டது - சைமன் டௌல்!
ஒரு வீரருக்காக 20 கோடிகளை இறைத்த அணிகளுக்கு மத்தியில் மிட்சேல், தாக்கூர், ரவீந்திரா ஆகிய 3 தரமான வீரர்களை 20 கோடிக்குள் வாங்கிய சென்னை ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக முன்னாள் வீரர் சைமன் டௌல் பாராட்டியுள்ளார். ...
-
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் குர்ரன் ஷசாத் விலகியுள்ளார். ...
-
சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைத்தது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது - டேரில் மிட்செல்!
தற்போது என்னுடைய வாழ்வில் இருக்கும் சில சூழ்நிலைகளில் இது என்னுடைய குடும்பத்தை பல வழிகளிலும் முன்னேற்றுவதற்கு உதவும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி ரசிகரின் கேள்விக்கு தனது பாணியில் பதிலளித்த எம் எஸ் தோனி!
தங்கள் அணிக்காக ஒரு கோப்பையை வென்றுகொடுக்குமாறு கேட்ட ஆர்சிபி ரசிகருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி பதிலளித்துள்ளார். ...
-
AUS vs WI: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5ஆவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஏலத்தில் நாங்கள் சரியாக செயல்பட்டு இருக்கிறோம் என்று நம்புகிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த மினி ஏலத்தில் எவ்வாறு அணியை கட்டமைக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்க கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் பணிகளை மேற்கொண்டோம் என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47