That india
IND vs NZ: உம்ரான் மாலிக்கை பாராட்டிய முகமது ஷமி!
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா வெற்றியாளரை தீர்மானிக்கும் 2ஆவது போட்டியில் அபரமாக செயல்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ராய்ப்பூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத நியூசிலாந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களுக்குச் சுருண்டது. குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 15/5 என சரிந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 36 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து 109 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 51 (50) ரன்களும் சுப்மன் கில் 40 (53) ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக வந்த நியூசிலாந்தை தோற்கடித்து சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை நிரூபித்தது. மேலும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்திலும் இந்தியா வெற்றி நடை போடுகிறது.
Related Cricket News on That india
-
பேட்டிங்கில் நாங்கள் மிக மோசமாக செயல்பட்டுவிட்டோம் - டாம் லேதம்!
இந்திய அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டனான டாம் லதாம், ஆடுகளத்திற்கு ஏற்றவாறு விளையாடாததே தங்களது படுதோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 2nd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
IND vs NZ, 2nd ODI: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 108 ரன்களுக்கு நியூசி ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் வரிசையாக அவுட்டாகி வெளியேற அந்த அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
INS vs NZ, 2nd ODI: முகமது ஷமி வேகத்தில் தடுமாறும் நியூசிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs NZ, 2nd ODI: டாஸின் போது தடுமாறிய ரோஹித் சர்மா; காணொலி!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் டாஸின் போது ரோஹித் சர்மா செய்த விஷயம் ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்திவிட்டது. ...
-
IND vs NZ, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராய்ப்பூரில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs நியூசிலாந்து, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராய்ப்பூரில் நடைபெறுகிறது. ...
-
IND vs NZ: ஸ்லோ ஓவர் ரேட்; இந்திய அணிக்கு அபாரம்!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தவறு செய்ததாக கூறி போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்ஃப்ராஸை கானை எச்சரித்த மும்பை தேர்வுக்குழு உறுப்பினர்!
சர்பராஸ் கானின் இந்த பேட்டிக்கு, மும்பை அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் மிலிந்த ரீஜ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய தேர்வாளர்களை கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
இந்திய அணிக்கு சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது குறித்து தேர்வாளர்களை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
விராட் கோலி இந்த தியாகத்தை செய்தாக வேண்டும் - ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீரர் விராட் கோலி, அன்று சச்சின் டெண்டுல்கர் செய்த ஒரு தியாகத்தை செய்தாக வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
டாம் லேதமிற்கு பதிலடி கொடுத்த இஷான் கிஷான்!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் டாம் லேதம் செய்த தவறான விஷயத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷானும் செய்தது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டியது. ...
-
யார்க்கரை வீச சொன்னது கோலி தான் - ஷர்துல் தாக்கூர்!
யார்க்கர் லெந்த்தில் பந்துவீசு, விக்கெட் எடுக்கலாம் என அறிவுறுத்தியது விராட் கோலி தான் என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். ...
-
பிரேஸ்வெல் மற்றும் சான்ர்ட்னர் அமைத்த பார்ட்னர்ஷிப் பார்ப்பதற்கு மிக அருமையாக இருந்தது - டாம் லேதம்!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47